Archivio delle Categorie: அரசியல்

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Leggi l’articolo completo

தமிழகத் தேர்தல் முடிவுகள் – இலவசங்களைத் தூக்கி எறிந்தனர் மக்கள்

தமிழகத் தேர்தல் முடிவுகள் – இலவசங்களைத் தூக்கி எறிந்தனர் மக்கள்.

நாடுகடந்த அரசின் மகளீர் தின அறிக்கை இவ்வாறு இருந்தால்???…!!!

animaliநாடுகடந்த அரசின் மகளீர் தின அறிக்கை இவ்வாறு இருந்தால்???…!!!  உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு, எத்தனை பலனுடையதாக அமையும்….!!!

எத்தனை வேதனைகளைக் கடந்து வந்திருந்த போதிலும் ஏதுமே நடாக்காதது போல், அவ்வப்போது அறிக்கைகளும், நிகழ்வுகளும், முடிவுகளும் வந்த வண்ணமே இருக்கின்றன.

Leggi l’articolo completo

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும்,…தொடர் பக்கங்கள்….பாகம்3 அருகன்.

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும்,…தொடர் பக்கங்கள்….பாகம்3 அருகன்.

http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!4219.entry – 01

http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!4427.entry – 02

 சிங்கள வரலாறு ஏற்கனவே இரு பாகங்களை வாசித்த பலர் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பிலும், இதன் போக்கு எத்தகைய உண்மை பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும், வழமைபோல் இவருடைய ஆக்கத்தில் வெளிவருகின்ற முற்போக்கு கருத்துக்கள் இதில் வெளிவருமா என்று சில அரசியல் நகர்வாளர்களும், விவாதத்திற்கே என்று இன்னொரு  சிலரும் …, சஞ்சரிக்கத்தான் போகின்றனர்… இது ஒருபுறம் இருக்க, பேரறிஞர் ஐயா சிவத்தம்பியைப்பற்றி ஒரு சம்பவத்தை பதித்தாகவே ண்டும் … காரணம் “கடந்த வரலாற்று உண்மைகளை,  இன்றைய அநர்த்தத்தோடு ஒப்பிடும்போதே, எதிர்கால பாதைகளிற்கான கடினமான கற்கள் விலக்கப்படுகின்றன…”  இதனடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டில் ஐயா மதிப்பிற்குரிய சிவத்தம்பி அவர்கள் “தமிழ்நாடு கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழுத்தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும்இ தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் அண்மையில் பி.பி.ஸி. தமிழோசைக்கு தெரிவித்தார்.” என பல இணையங்கள் காரசாரமாக வெளியிட்டிருந்தன… இதற்கும் இலங்கை வரலாற்றிற்கும் என்ன சம்மந்தம் என்று ஒரு சிலர் வினாவத்தான் செய்வார்கள்!!!… “எப்போதும் பலம்பொருந்தியவர்களின் செயற்பாடுகள் சர்வதேச சிறப்பைப்பெறும், மாறாக பலங்குன்றியவர்கள் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் அது விமர்சனத்தோடே ஸ்தம்பித்துவிடுகின்றன…” என எழுகின்ற கருத்தின் அடிப்படையில் பேரறிஞரான ஐயாஅவர்கள் திடமாக வார்த்தைகளையும் அடிகளையும் எடுத்துவைக்காது, பலவீனமான கருத்தைத்தெரிவித்து விட்டு இப்போது 2010ல் அந்த விழாவில் கலந்து சிறப்பித்து வந்திருக்கின்றார்… நல்ல செயற்பாடு, இதையே அவர் ஆரம்பத்தில் திடமாகச்சொல்லியிருந்தால் அனைத்து தமிழ் ஊடகங்களும் தமிழ் அறிஞர்களும் அதுதொடர்பாக பேசியிருப்பார்கள், அந்த மாநாட்டில் பல தமிழர்கள் கலந்தும் இருப்பார்கள்…  தமிழ் உலகம் முழுதும் சிறப்பிக்கப்பட்டிருக்கும்… இவ்வாறான செயற்பாடுகளே வரலாற்றை மழுங்கடித்து முன்னுக்குப்பின்னான முரன்பாடுகளை எதிர்காலச்சந்ததிக்குத்து தோற்றுவிக்கின்றது. முன்னிக்கவேண்டும் ஐயா அவர்களே! தவறுகள் பகிரங்கமாக்கப்பட வேண்டும் அப்போதுதான் அவை திருத்தப்படும்!!!
இனி… அடுத்து பகுதிக்குச் செல்வோம்.        Leggi l’articolo completo

தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்படவிடுவதில்லை!!!

தமிழ் அமைப்புக்களுக்கும், தமிழ் போராட்ட ஆர்வலர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!! – அருகன்

vp1228_thumb இலங்கை அரசும், மகிந்த குடும்பத்தினரும் சிங்கள இனவாதிகளும் இணைந்து சர்வதேசத்தின் விழிகளில் “கூளிங்கிளாஸ்” போடப்பார்க்கின்றனர்.

சிறுபான்மை இனத்தின் சிக்கலை ஒரு பொருட்டாக எடுக்காது, உள்ளாட்டுச்சிக்கலை (மகிந்த-சரத்)பிரபல்யப்படுத்தி அதனை அரசியலாகவும், போர்க்குற்ற; திசைதிருப்பல்களும் இடம்பெற்று வருகின்றமை மறைவாகஉள்ளஉண்மைகள்.

தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சிக்கலை விட்டு, தமிழர்களின் அபிவிருத்தி, மீழ்கட்டுமாணம் போன்றவற்றை விடுத்து, சரத்தின் விவகாரத்தை தூக்கிப்பிடித்து ஒரு செய்தியில் பலதடவை சரத்… சரத் என்று முணுமுணுத்து தமிழர்களின் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். இதன்மூலம்மகந்தவையும் அவர் அரசையும்கீழ்ப்படுத்துpன்றோம் என்ற பாணியில் சரததை தமிழர்க் மததியில் உயர்த்திக்கொணடு போகின்றோம்.

இது அரசின், அரசியல் தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எப்போதும் தமிழர்களை ஒன்றிணைய விடாது, தமிழர்கள் சிங்களவர்களை தாங்கியே இருக்க வேண்டும் என்பதனையே கடந்த காலத்தில் கூட்டமைப்பும் உறுதி செய்திருக்கின்றது. Leggi l’articolo completo

சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவருமான திரு. சிவாஜிலிங்கம் அவர்கள்

நா.ம. உறுப்பினர் சிவாஜிலிங்கம் அதிர்வு இணையத்திற்கு செவ்வி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவருமான திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். தனது நிலைப்பாடு, மற்றும் இந்தியப் பயணம் குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் – Malarum Ma Thamileelam…

2006ம் ஆண்டு அருகனால் எழுதப்பட்ட விடயத்தை மெருகூட்டப் பார்க்கின்றனர் புலத்தில் பேரவையாளர்கள்- ஆனால் அது தம்முடைய உதயமாக எடுத்தியம்புகின்றனர். அதன் ஆக்கம் கீழே தரப்படுகின்றது.       

 ”மலரும் மா தமிழீழம்”                     என 2008ல் இது நூலாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

“அடிதடி 14”

http://it.calameo.com/read/0000948120aaf09622d82

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போகி
றது.

 எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று எண்ணி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்… தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது.

மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர்…, ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன்.

அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம்,நிறையவே இருக்கிறது… ஆழமாகவே கிடக்கிறது. அதாவது, இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ, அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். Leggi l’articolo completo

தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு.களும் இணைந்து இலங்கை அரசின் அரசியல் சட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் தமிழ் நிலை அதோகதிதான் – 19- 11 2006 – Arugan

தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு.களும் இணைந்து இலங்கை அரசின் அரசியல் சட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் தமிழ் நிலை அதோகதிதான் – 19- 11 2006 – Arugan

BodyPart04 இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்னநடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம் இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது. Leggi l’articolo completo

இன்றைய பின்னடைவுகள்கூட தனிச் சிங்களவரால், சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டவையல்ல என்பதனை நேரடியாகவே செல்லக்கடமைப்பட்டுள்ளேன். அங்கேயும் தமிழனின் தந்திரம் இருக்கத்தான் செய்கின்றது…

  “கரவாது உவந்தீயும் கண்ணன்னார்
கண்ணும் இரவாமை கோடி யுறும்.”

தமிழ் விதை நிலங்கள்

தமிழ் விதை நிலங்கள்

வாழச் சொல்லி வாழ்த்துச் சொல்வோர் பலருள்ள இவ்வுலகில், வாழ்வைத் தந்து வாழச்சொல்லும் வள்ளல் அடிகளை வணக்கத் தோடு வருடுகின்றேன்.

வள்ளல்களை வாழ்த்த வந்துள்ள வெள்ளப் பெருமக்களை கள்ளமற்ற வணக்கத்துடன் அருகன் என் வார்த்தைகளை எடுத்து இயம்ப முனைகிறேன்.

எனது சிறுபிள்ளைத் தனமான சித்திரத்தில், சரித்திரத்தின் சத்திரத்தில் நின்று சிந்திக்கும் பெரும் பாக்கியம் பரிசாகக்கிடைத்தது எனக்கு.
தவறுகள் இருந்தால் தறித்தெடுத்து விறகாக்கி விடுங்கள், சிறப்புகள் இருந்தால் பறக்கும் பட்சிகளின் இறக்கை ஒலிக்கெதிராக உங்கள் கரகொலிகளைக் கொட்டிக்காட்டுங்கள்.

“அளப்பெரிய அற்புதமாம் தொழற்கரிய தூயவரின்
களப்பெரிய புலிகளின் புயல்”

 அந்தப் புலிகளின் பலத்தை எழுத்தில் காட்டி விடும் அற்பத்தனம் எனக்கில்லை; என்றாலும், சொற்பமாவது சொல்லியாக வேண்டும் என்ற எனதுள்ளத்து அலைகளைச் சற்று ஓடவிட முயற்சிக்கின்றேன்.
அவ்வளவுதான்!.

“ஒடுக்கப்படும் சமுதாயங்களில் இருந்தே வரலாறு படைக்கும் சக்தி பெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமுகத்திற் பிறந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்” இது “தலைவர்” அவர்களின் அற்புதமான அபூர்வவார்த்தைகள்.

தனக்கென்று வாழாத பொதுமனிதரைக் காணுங் காலம் மாறிவிட்டதோ? என்று எண்னும் போதில்தான், நமக்காகத் தமதுயிரைத் தரையிலிட்ட தனிப்பெரும் தவப்புதல்வரை தரணியிலே தங்கமாய் விளங்கும் தமிழீழந் தந்ததென்ற பெருமை தோன்றிடும். Leggi l’articolo completo

முன்னைய தவறினை இலங்கை அரசு இம்முறை மேற்கொள்ளக்கூடாது என்பதில் திடம்…

Sri Lanka 2009ஆரம்பத்தில், வடக்கில் தமிழர்கள் பெரும்பாலும் வாழ்ந்தாலும் குறுகிய அழவில் முஸ்லீம் மக்களும், ஒருசில சிங்களவர்களும் இருந்ததன் காரணத்தால்தான் புலிகளின் வழர்ச்சி அதிகமாக்கப்பட்டிருந்தது. எனவே, இம்முறை இலங்கையின் அனைத்து பகுதியிலும், சிங்களக்குடியேற்றத்தை மேற்கொள்ளவும், அனைத்து விழாக்களிலும் பௌத்த குருமாரை முன்நிலையில் நிறுத்தவும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு தமிழ் அரசியல்வாதிகள் கையாளாகாத்தன்மையில் இருப்பதும் வெளிச்சம்.

இதற்கு தமிழ் அரசியல் அமைப்பாளர்கள் என்ன செய்யவேண்டும்???? எல்ல அமைப்புக்களும் தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற பல்லவியினைப் பாடுகின்றார்கள். ஏன்னைக்கேட்டால் தமிழர்கள் அரசியல் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி “ இலங்கை அரசின் குடையின் கீழ் அனைத்துப்பகுதிகளிலும் தமிழ்க் கட்சிகள் தேர்தலில் நிற்கவேண்டும். வெற்றியோ தோல்வியோ அவர்களின் செயற்பாடு இடம்பெறவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளுக்கு எப்படி தமிழர்கள் வாக்குகளை வழங்குகின்றார்களோ அவ்வாறே, தமிழர்களுக்கும் சிங்களவர்கள் வாக்குப்போடுகின்ற நிலை வரவேண்டும்” அப்போதுதான் இலங்கை ஒருகுடையின்கீழ் செயற்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளமுடியும். சிங்களவர்கள் தமிழ்ப்பிரதேசங்களில் வாக்குரிமையினைக்கேட்கலாம். ஏன்தமிழர்கள் சிங்களவர்கள் வாழும் பிரதேசஙங்களில் வாக்கினைக்கேட்கமுடியாது? Leggi l’articolo completo