தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்க தேர்தலே தகுந்த பரிட்சை
இலங்கை அரசியலும், தமிழர்களின் உரிமைகளும்…
கடந்த சில மாதங்களின் முன்பு இலங்கைத்தீவில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கைத்தூதராலயத்தால் இத்தாலி றோம் நகரில் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் குறிப்பிட்ட அமைப்பாலும் சில கலைநிகழ்ச்சிகளும் இலங்கை அதிபர் உயர்திரு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கான விண்ணப்ப மனுவும் கையளிக்கப்பட்டது. அவ்வேளையில் இத்தாலியின் இலங்கைத்தூதராலயத்தின் தூதுவர் அவர்கள் தனது உரையில் எடுத்துக்காட்டிய ஒருவிடயத்தை இங்கு மீட்டுக்கொள்ள விரும்புகின்றேன். சிங்கள மக்களுக்காக இலங்கையின் வரலாறு 2500வருடங்கள் ஆனால் தமிழர்களின் இலங்கை வரலாறு என்னது 5000வருடங்களுக்கும் மேல் என்று ஆணித்தனமாக எடுத்துரைத்தார். அதற்கான ஆதாரம் இணையத்தில் கூட வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.youtube.com/arugan2009
http://www.youtube.com/watch?v=EUeIqHTTExM
எதுவாகிலும் இன்று இலங்கை என்ற தாய்நாட்டுக்குள் ஒன்றுபட்ட நிலையில் உயிர்சேதமின்றி அனைவரும் சமமாக வாழக்கூடிய வழியினை இன்றைய அரசு தலைவர் பெற்றுத்தந்திருக்கின்றார். கடந்த முப்பது வருடங்களில் இடம்பெறாத மனிதாபிமான நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.இதற்குக்காரணம் யார்?… முன்மு இதற்கு மாறாக கேடுகெட்ட நிலையில் எமது தேசம் சென்றமைக்குக்காரணம்தான் யார்???
இதன்நோக்கம் யாரையும் குற்றப்படுத்துவதல்ல மாறாக தவறுகளைச்சுட்டிக்காட்டுவதன்மூலம், தவறுகள் நடக்காது தடுப்பதே நோக்கமாகும். கடந்த காலத்தில் ஜ.தே.கட்சியின் அனைத்து அணுகுமுறைகளுமே தமிழர்களின் தொடர் அழிவிற்கும் புலிகளின் வளர்ச்சிக்கும் காரணம் என்றால் அதற்கு ஆதாரம் ஏலவே குவிந்து கிடக்கின்றது. அதுமட்டுமல்லாது, ஒருவிடயத்தை மேற்கொள்வதற்கு காலதாமதம் எடுப்பது அதைவிட மோசமானதொன்று… அதே தவறினை மீண்டும் மிண்டும் மக்கள் விடாது கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தற்போதைய அரசினை மேலும் பலப்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழர்களின் முழு உரிமையினை ஏன் தனி அரசைக்கூட அமைத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1987ஆம் ஆண்டில், இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது. முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்பை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் போர் மூழச்செய்ததை இன்றும் மறக்கமுடியாது.அதன்மூலம் ஏற்பட்ட போருடன், இழப்புகள் கூடிய சேதத்தில் முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நோர்வே முன் வந்ததையடுத்து, அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்ததுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. சில காரணங்களால், பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், போர் நிறுத்தமும், சமாதான முயற்சிகளும் 2007 ஆம் ஆண்டு வரையில் இலங்கை ல் நடைமுறையில் இருந்து வந்தன.
இந்நிலையினைக்காரணங்காட்டி ஏன் ஒரு நீதியான தீர்வினை அன்றைய அரசு முன்வைக்கவில்லை என்ற கேள்வி இன்று மிக அவசியமானவை . முன்னைய அரசாங்கங்கள் இலங்கை அரசினை சீர்கெடுத்து வந்த சூழ்நிலையினைக் குறுகிய காலத்தில் சீர்செய்த பெருமையுடைய தற்போதைய அதிபர் போற்றப்படவேண்டியவர். இவருடைய போக்கு எதிர்கட்சிகளையோ மாற்றுக்கட்சிகளையோ காலப்போக்கில் அழிந்து ஆழுங்கட்சியின் ஒருபிரிவே எதிர்க்கட்சி என்று மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போதைய ஆழுங்கட்சியினைத் திரும்பிப்பார்த்தால், அன்று பலமிக்கதாக இருந்த ஜ.தே.கட்சியின் முதலாளித்துவ வர்க்கப்போக்கினை எதிர்த்து 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது. மகிந்த ஆட்சியில், அது நாட்டின் தேசிய நலன்கருதி இராணுவ முறையினைக்கையாண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2 – 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6மூ வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3வீத வாகுகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
இந்த இடத்தில்தான் நாம் முக்கிய விடயத்தைக்கவனிக்க வேண்டும். அதாவது, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களின் வரலாற்றையும் அரசியல் காலத்தில் இடம்பெற்றதகவல்களையும், அவர் இறப்பின் நிகழ்வினையும் அவரின் மதத்தினையும் சற்று அலசிப்பார்த்தேமேயானால், பல உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு. ஆரம்ப காலத்தில் இருந்தே சிங்கள வர்க்கத்தின் ஒருசிலரால் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் பாதிக்கப்பட்டதென்பது உண்மையே!!! சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால முக்கியஸ்தரும், முன்னாள் பிரதமருமான இவரை சிங்களவர்களே சுட்டுக்கொன்றனர். காரணம் பலவிருந்தும் அவர் ஒரு பௌத்தரல்லாதவர் என்பதே மிகமுக்கியமாகக் கருதப்படுகின்ற போதிலும் அவர் ஒரு பௌத்தராகவே தன்னை அரசியல் நோக்கத்திற்காக அமைத்துக்கொண்டார் என்பதே முக்கிய காரணம் என்றேஎன்னால் உணரப்படுகின்றது. எனவே பௌத்தனல்லாத யாரையும் இலங்கையில் அதிபராக்கக்கூடாது என பௌத்தவாதிகள் பலமாக இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் முறியடித்து அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த எமக்குக்கிடைத்த ஒரேயொரு தலைமையாளராக தமிழருக்குக்கிடைத்த இலங்கை அதிபரை நல்லமுறையில் பணன்படுத்திளால் தமிழர்களின் எதிர்காலம் விடிவுநோக்கி நடைபோடும் என்பதில் ஐயமில்லை.
முன்னாள் அதிபர் பிரேமதாசாவை புலிகள் கொன்றனர் என்று அவர்களை தீவிர வாதிபட்டியவில் சேர்த்தனர். ஆனால் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களை சுட்டுக்கொன்ற அந்த மதகுருவை என்ன செய்தார்கள்… அவர் பரம்பரையில் தம்மை பௌத்தர்களாக்கிக்கொண்டு தன்னை அதிபராக்கிய அவர் புதல்வியாலோ மனைவியாலோ தீர்வு காணப்படாத நிலையில் குறுகிய காலத்தில் தமிழர்களுக்கான புதுவழியைக்காட்டியதோடு, யத்த நிலையிலும் திடீர் மாற்றத்தைக் கொணர்ந்தார். தமிழில் தானும் உரையாட முயற்சித்து தன்னையும் ஒரு தமிழன்போல் மக்களோடு மக்களாக உங்களில் ஒருவனாக நாட்டின் அமைதிக்காய் அர்ப்பணித்திருக்கும் தற்போதைய அதிபர் நிரந்தரமாக பதியில் அமர தமிழர்கள் தங்கள் ஆதரவை அவருக்கு வழங்க வேண்டும். இது தேர்தல் காலத்தில் எழுதப்படுவதால் ஒரு அரசியல் விமர்சனமாக கருதாது, தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக கருதவேண்டும் என்று விரும்புகின்றேன்.
கடந்த வரலாறுகளில் எமக்கு ஏராளம் படிப்பினைகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பினைகள் போதும் எதிர்காலத்தை நிர்ணயிக்க… அந்த வழியிலே கடந்த வரலாற்றை நினைவுபடுத்த எத்தணிக்கின்றேன்.
கடந்த காலத்தில் பதவிக்குவந்த அரசாங்கங்களின் பார்வையினைத்திருப்பினால், பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 (ஜூலை 26, 1957) … தமிழர்களுக்கு நற்பாதையினைக்காட்ட முனைந்திருந்தபோதும் அது கிழித்தெறியப்பட்ட காகிதமாக முடிவடைந்த கேவலமும் நடந்துதான் இருக்கின்றது.
அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தம் பலருக்குத் தெரியாமலே போய்விட்டது.
தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.
குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4- 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன்ற சோகக்கதையும் உள்ளடங்கித்தான் தமிழர்கள் போராட்டம் புறப்பட்டதென்பதனை தற்போதைய தலைவர் புரிந்து தமிழர்களுக்குத் தக்க தரத்தையும் உரிமையினையும் பாதுகாப்பையும் வழங்குவார் என்றும் நம்பித்தான் பார்ப்போமே!!!
வல்லரசுகளின் ஆயுதவிற்பனைக்காகவும் அரசியல் சதுரங்கத்திற்காகவும் பயன்படுத்திய காய்களில் புலிகளும் ஒன்று. அப்புலிகளின் பலம் வல்லரசுகளை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் அதிகரிப்பதைப் பார்த்து திகிலடைந்தே இப்போருக்கு புலத்தள்ளல் இருந்தது என்றால் அது மறைக்கப்பட்ட உண்மைகளே!
அத்தோடு மன்னார்ப்பகுதியில் மெதுவாய் கசிந்துவருகின்ற பெற்றோலியம் தொடர்பான சில அழுத்தங்களும் இந்தியா சீனா போன்ற நாடுகளை இப்போராட்டத்தின்போக்கை மாற்ற எத்தணித்துள்ளது என்றால் அதுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ச்சியாகக்காணப்படும் முறுகல் நிலையுடன் பாக்கிஸ்தானின் கெடுபிடிகளும் தீவிரவாதச்செய்கைகளால் இந்தியா சிதறடைவதனையும் கருத்திற்கொண்டு பல இரகசியத் தொடர்புகள் இடம்பெற்றிருந்தமை இலங்கை அரசிற்குச் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதுஎனலாம்.
இன்றுள்ள நிலையில் இன்னொரு விடயத்தையும் பார்த்தாகவேண்டும். இலங்கையின் முப்படைகளாக, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை என வகுக்க முடியும். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இலங்கை அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதியே முப்படை தளபதியாக கொள்ளப்படுகிறார். சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70 வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருதபோதும் தற்போது அது 2 குறைந்துள்ளது. இதில்கூட தற்போதைய அதிபர் மாற்றத்தை ஏற்படுத்த எத்தணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வேளையில் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பாக நாம் பேசியேயாகவேண்டும். அவருக்கு அரசஅதிபராகும் ஆசையிருந்தால் அதற்கு இது சந்தர்ப்பமா என்று எண்ணத் தோன்றுகின்றது. அல்லது, நாட்டுக்குச்சேவைசெய்ய விரும்பினால் அதற்கு ஆயிரம் வழிகள் அவருடைய பதவியில் இருந்தே செய்துகொள்ளலாம். அதற்காக இலங்கை அதிபராகத்தான் வந்து சேவை செய்ய வேண்டும் என்பதல்ல, அருகனால் பல அரசியல் ஆலோசனைகளை அப்பட்டமாக வெளியிடமுடியும் என்பதற்காக அருகனே அரசியலில் இறங்க வேண்டும் என்று அருகன் எண்ணுவதென்பது சிரிப்பிற்கிடமாக இருக்கின்றது. அதுபோலவே, சரத் பொன்சேகா வின் போக்கும் காணப்படுகின்றது. மேலும், இத்தேர்தலில் பங்குபெறுவதற்கு அவர் தெரிவு செய்திருக்கும் கூட்டமைப்புத் தொடர்பாகவும் அவருடைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் சிறுபான்மை இனத்திற்கு அவர் இன்றுவரை கொடுத்த தரத்தையும் காணும்போது, “அரசனுக்கு ஆசைப்பட்டு புருசனைக்கைவிட்டதாகப்போகப்”போகின்றதென்பதனைத் தெளிவு படுத்துகின்றது. இது தெரியாத எங்கள் தமிழ் கட்சிகள் தில்லுமுள்ளாடுகின்றனர். அரசியலை தனிய அரசியல் வாதிகளால் மட்டும் நடத்திவிட முடியாது என்பதனை இன்னும் எமது தமிழ் அமைப்புக்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஒரு தேசத்தில் கொடிய நோய் பரவிஇருக்கும்போது, அத்தேசத்தை எட்டிப்பார்க்காதவர்கள், அத்தேசத்தில் இருந்த கொள்ளைநோய் அகன்றதும், இல்லை சிரமத்தின் மத்தியில் அகற்றியதும், அதற்கு பின்னர் உரிமை கொள்ள பலர் கூடிவருவது போல் இருக்கின்றது இவருடைய செயல். இலங்கையின் தற்போதைய அதிபர் தனக்குக்கிடைத்த காலத்துக்குள்ளேயே தன்னாலான முழு மூச்சுடன் நாட்டை விருத்திசெய்ய வேண்டும் என்று மல்லுக்கட்டும்போது, அதற்கு ஆதரவு கொடுக்கவேண்டியவர்கள் மீண்டும் தேசத்தை பாழாக்க வகைதேடுவதனை காணும்போது, கண்ணீர் பெருக்கெடுக்கின்றது. முப்பது வருடத்திற்கும் பேலாக சாதிக்கமுடியாத சரித்திர மாற்றத்தை சாதூர்யமாக குறுகிய காலத்துக்குள், தன்வசப்படுத்திய சாதனையாளனவன்.
இன்னொருமுறையாகக்கூட சொல்ல வேண்டிய கடப்பாடும் எனக்குண்டு, அதாவது மகிந்த அடித்துக்கொண்ற பாம்பு ஏற்கனவே செத்து விட்டது. செத்தபாம்பைத்தான் தான் அடிக்கின்றேன் என்று அவருக்கும் தெரியும். ஆனால் உலகத்திற்கும் மக்களுக்கும் மண்டையில் உறைக்கும் வண்ணம் தூக்கித்தூக்கி அடித்துக்கொண்றதாகக்காட்டுகின்றார். முதலாவது, கருணாவின் விரிவினால் பாதிசெத்துப்போன புலியின் வீரம் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தால் மீதி செத்துப்போனது. புpன்னர் தமிழ்ச்செல்வனின் இழப்பினால் இன்னுங்கொஞ்சம் செத்துப்போனது, பிறகு நிதி தொடர்பாகவும் உட்பூசல்காரணமாகவும், வெளிநாட்டுத்தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்தடைகள் காரணமாகவும், சில தலைமைத்துவங்கள் வெளியெறியதற்கும், தலைக்கணம்தலைக்கேறிய காரணத்தாலும் மீதி செத்து … இப்படி பல விடயத்தால் செத்த பாம்பைத்தான் மூச்சுமுட்ட அடித்துக்கொண்றார் எமது அரசதலைவர். இருந்தும் புலிகளின் அழிவு என்பது சாதாரண விடயமல்ல பேச்சுவார்த்தைக்கே ஒத்துவராத புலிகளை மூச்சுவாங்கவைத்துவிட்டார். எது எதுவாகிலும் தமிழர்களின் மரண இழப்பு அறவே தற்போது நின்று விட்டது. இதனைதான் தக்கவிதமாகப்பயன்படுத்த வேண்டும் என்கின்றேன்.
இதில் கூட்டணியினரைப்பற்றியும் பேசியாகவேண்டும். தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளே தனிநாட்டுக் கோரிக்கைக்காக போராடியவர்கள் போலும், அவர்களே ஏகபிரதிநிதி போன்றும் காணப்படுகின்றன. ஆனால் தனித்தமிழீழக்கோரிக்கை புலிகள் ஆரம்பிப்பதற்கு முன்னமே, தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அது மக்கள் மத்தியில் தறஇபோது பேசப்படுவதே இல்லை. அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். ஆனால் இன்று பல தமிழழ் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு இடத்தில் சந்தித்தனர் ஆனால் அதன்முடிவு தமிழர்களாலேயே புரிந்து கொள்ள இயலாது காணப்படுகின்றது… சரி நாம் எமது விடயத்திற்கு வருவோம்…. இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம். இப்போது உலகளாவிய ரீதியில் தமிழர்களின் போக்கு விஸ்தரிக்கப்பட்ட போதிலும் அரசியல் திட்டங்கள் போதாமையாலும், ஆலோசனைகள் இல்லாததாலும், அனைத்து கட்சிகளும் அனைத்து தலைவர்களும் தம்மையோ சிறப்பானவர்கள் என்று கருதுவதனாலும் தமிழர்களை வைத்து சிங்கள அரசியல்வாதிகள் பந்தாடிக்கொண்டிருக்கின்றார்கள். இப்போது, மக்கள் மத்தியில் இருக்கும் பிரபல்யப்போக்கு இலங்கை அதிபரை தமிழர்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகளிடத்திலும் ஒரு பிரபல்யமான விளம்பரத்தை வழங்கியிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு தற்போதைய அதிபர் எதனைச் செய்யப்போகின்றார் என்பதனை கோருவதனை விடுத்து, முட்டாள்தனமாக அரசியலை நடாத்துகின்றனர் எமது தமிழ் அரசியல்வாதிகள்.
இந்த விடயத்தில் தற்போதைய அமைச்சர் வி.முரளிதரனைப்பாராட்டவேண்டும். பிடித்தபிடி உடும்புப்பிடியாக பிடித்துவிட்டார்… அதாவது, அவரால் தமிழர்களுக்கு எத்தகைய முடிவினை அரசிடம் இருந்து எடுத்துக்கொடுக்கமுடியும் என்பது அவர் மக்களுக்குச்செய்யப்போகும் சேவையினைப்பொறுத்ததும், அரசில் அவருக்கு இருக்கப்போகின்ற அதிகாரத்தையும் பொறுத்தது. இதில் ஒரு முக்கிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். தேரிந்தோ தெரியாமலே அவருடைய காட்டில் மழைபெய்கின்றது.அதனைப்பயன்படுத்த தமிழ்க்கட்சிகளோ அல்லது, புலிகளின் ஆதரவாளர்களோ முன்வராது, அவரை ஒதுக்கிவிடவே எத்தணிக்கின்றனர். இதை நான் சொல்வதற்கும் காரணம் உண்டு… இவ்வாறு எழுதுவதால் அவருக்கு யால்றா அடிப்பதாக இவ்வெழுத்துக்களைக் கருதிவிடக்கூடாது, ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் நல்லது செய்தாலும் அதனைக்கேவலமாகவோ ஒதுக்கியோ, எழுதுவது, எழுத்தாளருக்குப்பொருந்தாது. கருணா அம்மான் என்ற முரளிதரன் தமிழர்களின் விடுதலைக்காகவும், தமிழீழக் கோரிக்கைக்காகவும், புலிகளுக்கு கட்டுப்பாடுள்ள ஒரு நம்பகத்கமான ஒரு நபராகவும் இருந்ததோடு, நடைபெற்ற பேச்சுக்களிலும் தன்னுடைய பங்களிப்பை மேற்கொண்ட விடயத்தை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். இன்றுவரை விடுதலைப்புலிகளின் சார்பில் அரசாங்கங்களுடன் பேச்சுக்களை நடாத்தியோரில் உயிருடன் இலங்கையில் இருக்கும் ஒரேஒரு தமிழன் கருணா என்கின்ற அமைச்சரே!
ஐந்தாம் சுற்று பேச்சுக்கள் ஜேர்மனி யில் இடம்பெற்றபொழுது, புலிகளின் சார்பில் பங்கேற்றிய குழுத்தலைமையில் அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம் போன்றோர்கள் பங்குபற்றினார்கள் இதில், அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், போன்றோர் அமரராகிவிட்டார்கள். முரளிதரன், முரளிதரனோ அமைச்சராகிவிட்டார். அடேல் பாலசிங்கம் கையைவிடவேண்டியதுதான் இலங்கையர் அல்லாதவரிடம் அதிலும் தமிழர் அல்லாதவரிடம் இருக்கும் பொறுப்புக்கள் தமிழர்களிடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, புலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு காரணம் யார் என்ற கேள்விகளுக்கு விடைகாண புறப்பட்டால் பல புற்றீசல்கள் வெளிவரும். அது போகட்டும். இந்தப்பேச்சில் அரசுசார்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொண்டு தொடர்பேச்சுக்கு வழிவகுத்ததேஒழிய தீர்விற்கு வழிவகுக்கவில்லை.
இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான ஆறாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின்னர் ஜப்பானில் மார்ச் 31இ 2003 – மார்ச் 21இ 2003 நாட்களில் இடம்பெற்ற ஆறாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும்.
இலங்கை அரசுக்கும் (ஐ.தே.க) விடுதலைப் புலிக ளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் அக்டோபர் 31 – செப்டம்பர் 3 இடம் பெற்றபோது, விடுதலைப்புலிகளின் சார்பில் அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் காலம் டிசம்பர் 2 – 5 2002 இதில் புலிகளின் சார்பில் அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம்
இவ்வாறு பல நிகழ்வுகளில் தமிழர்களின் சார்பில் பங்காற்றிய பெரும் பங்கு தற்போதைய அமைச்சர் முரளிதரன் அவர்களுக்கே உண்டு.
இதுமட்டுமல்லாது மேலும் பல பேச்சுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள்இ 1994 – 1995 சமாதானத்தை முன்வைத்து 1994 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா குமாரணதுங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையான பேச்சுவார்தைகளை குறிக்கின்றது. இப்பேச்சுவார்த்தைகள் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் 1995 ஜனவரி 3இல் இருதரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய காலப்பகுதியில் இறுக்க நிலையை அடைந்தது. தமிழ் மக்களின் உடனடி அடிப்படைப்பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க மறுக்கின்றது எனக் காரணம் காட்டி விடுதலைப் புலிகள் ஏப்ரல் 19இ 1995ம் ஆண்டு முன்னறிவித்தலுடன் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொண்டனர்.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம்இ 2002 நோர்வே நாட்டின் அனுசரையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே பெப்ரவரிஇ 2002 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறிக்கும். புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இந்த ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள்இ இரண்டாம் சுற்று எனப்படுவது இலங்கை அரசுக்கும் (இலங்கை சுதந்திரக் கட்சி) விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக்டோபர் 28-29இ 2006 திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும். வட கிழக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு வாழ்வியல் சூழலில் இருக்கையில் இப்பேச்சுக்கள் நடந்தேறின.
இவ்வாறு பார்க்கும்போது, தமிழர்களின் விடிவிற்கான முடிவு எந்தப்பேச்சுக்களிலும் வந்தேறவில்லை. தலைமையின் அணுகுமுறையில் தவறுகள் இடம்பெற்றால் அதனைச்சுட்டிக்காட்டவேண்டியவை துணைத்தலைவர்களுக்கு உரித்துண்டு. அவ்வேளையில் மக்கள் உயிர்நலம், எதிர்காலம் போன்றவற்றை எண்ணிப்பார்க்கும்போது, கருணா என்கின்ற தற்போதைய அமைச்சர் பாராட்டக்கூடியவரே. அவரின் பிரிவு கிழக்கில் ஏற்படவிருந்த பல பேரழிவுகளை காத்து புலிகளின் பலத்தைக்குறைத்ததும் புலிகளின் இழப்பிற்குக்காரணமே. இதிலும் புலிகளின் தந்திரத்தில் ஒரு பகுதியோ என்றுகூட எண்ணத்தோன்றுகின்றது. அதுபோலவே பிள்ளையானுக்கும் கருணாவிற்கும் இடையில் இருக்கும் சிக்கலைக்கூட அரசியலாகக்கருதமுடிவதாகவே காணப்படுகின்றது. சிலரை நம்பவைப்பதற்கு சில நம்பிக்கையானவர்கள் இடையில் நம்பாது இருப்பதே சாலச்சிறந்தது. இது என்னொரு ஆக்கத்தில் விவாதிக்க அல்லது விபரிக்கப்பட வேண்டியவை…
1946ல் அரசியல் யாப்பு நிறுவப்பட்டது, 1948ல் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் கிடைத்தது, இது வரலாறுகளானது… ஆனால் இன்று ஒரு தலைமுறைக்குள்ளே பல வரலாறுகளை எமது சமுதாயம் கண்டுகொண்டுள்ளமை வியக்கத்தக்கசெயலாகும்.
ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தமிழினத்தின் ஆதிக்க வெறியுடைய அரச மிருகமாக இருந்தது, அரசியல் யாப்பும், தேர்தல் முறையும் என்றால் அது புரிந்து கொள்ள அரசியல் வாதிகளாலேயே இயலாமல் இருக்கின்றது என்றால் அது மிக வெளிச்சம்.
தானே குழியினைத்தோண்டிவிட்டு தற்போது, தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றது தற்போதைய எதிர்க்கட்சியான சொத்தைப்பாம்புகள். தும்மாவல் உருவாக்கிய யாப்பே தமக்கு ஆப்பாக போனதால் அதை மற்றவேண்டும் என்று கங்கணம் கட்டுகின்றனர் ஆனால் அவர்கள் ஆட்சியமர்ந்தாலும் அது மாற்றப்படப்போவதில்லை. 1978ன் அரசியல் யாப்பின் பிரகாரம் முழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. அப்போதைய காலந்தொட்டே தமிழர்கள் அதிவேகமாக நசுக்கப்பட்டு வந்தார்கள் என்பதனை தமிழர்களே மறந்து, தற்போது கனவுலகத்தில் சஞ்சரிக்கின்றனர். இருந்தும் புலிகளின் வளர்ச்சிக்கு அதிக பங்களித்தவர்களும் இவர்களேயென்றால் அது மிகையில்லை. அதாவது, ஒரு தனிமனிதனின் ஆதங்கத்தை நிவர்த்தி செய்யாதபோது அவ்வாறான ஆதங்கங்கள் கூட்டமைப்பாகின்றன … அப்போதும் அது நிறைவேறாத விடத்து அது போராட்டங்களாகின்றன… எனவே முதல்முறையிலேயே தீர்வுகள் முன்வைக்காதவிடத்து முடிவில் பாரிய இழப்பைச்சந்திக்கநேரிடும் என்பதும் வரலாறே…!!!
தமிழர்களின் சாபக்கேடு… சாபக்கேடு… என்றே காலத்தைக்கடத்தவேண்டாம். இது சாபக்கேடல்ல சதிக்கேடு, தமிழர்களின் முட்டாள்தனத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் கிடைத்த சதிக்கேடு. இலங்கை அரசியல்யாப்பின் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளிலும், அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து செயற்படவேண்டும். கூட்டமைப்பின் இணைவு என்பது தமிழர்களின் விடிவுக்காகவல்ல அவர்களின் அரசியல் தந்திரத்திற்காக… விடிவு ஒரே முடிவில் கிடைக்கவேண்டும் 13ம் திருத்தத்தை மட்டும் பேசுவது பொருத்தமற்றது, தமிழர்களுக்கு தனியரசு அமையாவிட்டால், தமிழர்களுக்கொரு தேசமாக சிங்களவர்களுக்கொருதேசமாக இவையிரண்டையும் ஆளக்கூடிய மத்திய அரசுஅமையும்வகையில் சமஷ்டி முறையில் தீர்வு அமைய வேண்டும் என்பதே ஒnருமுடிவு என திடமாக அறிவிக்கவேண்டும். ஒரே முடிவு யாப்பில் மாற்றத்தை தமிழர்களுக்கு ஆதரவாக அமையும்வகையில் அமைத்தே ஆகவேண்டும் என்பதில் அனைத்துத்தமிழர்களும் திடமாக இருக்கவேண்டும். சாதாரன விடயத்தில் ஒத்துப்போகாத தமிழ்க்குழுக்கள் எப்படி மீதிவிடயங்களில் ஒத்துப்போவார்கள்???
தமிழர்களின் நிலையை பயன்படுத்தி தம்மைத்திடப்படுத்துவோர்களில் தமிழர்களே அதிகம் பயன்படுத்துபகின்றார்கள். புலிகளுக்கு எதிர்ப்பைக்காட்டுவதாக கூறிக்கொண்டு, தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்குப்போராடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் பின்நிற்கின்றார்கள் என்பது உண்மையே!!! இலங்கை அரசியல் மூலம் தமிழர்களும் இலங்கை அதிபராகலாம் என்ற முறையில் தேர்தல்நிலைமாற்றப்படவேண்டும். இதற்கு தமிழர்கள் மத்தியில் சர்வதேச ரீதியில் ஒரு மாபெரும் தீர்மானம் எடுக்கும்வகையில் இலங்கைத்தமிழ் அரசியல்வாதிகளால் பல்வேறு கருத்தரங்கிற்கு முன்வரவேண்டும். இதில் கட்சிவேற்றுமையின்றி அனைத்து அமைப்புக்களும் பங்குபெறும் வகையில் அமையவேண்டும். இதன்மூலம் ஒருங்கிணைந்த தமிழ் சமுகம் மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும். அது ஆயுதப் போராட்டத்திற்கல்ல அரசியல்திட்டத்திற்கு…!!!
தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலுள்ள பலத்த வேறுபாடுகள் உள்ளதை ஏற்கனவே பல நாவல்களில் வெளியிட்டுள்ளேன். இலங்கையில் நடைபெற்ற எமது தமிழ்மக்களின் போராட்டத்தின் அடிப்படை தீவிரவாதம் என்பது உண்மையே. அது பயங்கரவாதமல்ல!!! தீவிரவாதத்திற்கு போர்முடிவல்ல என்பதனை இலங்கை வைராக்கியம் கொண்ட அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். தீவிரவாதம் தீர்த்துவைப்பதன் மூலமே முடிவிற்குக் கொண்டுவர வேண்டியவையேயொழிய, அழிப்பில் முடிவிற்குக்கொண்டுவரமுடியாது. புல அரச தலைவர்களையும் ஆயுத பலமிக்க அணுகுமுறையுமே புலிகளை பயங்கரவாதபட்டியலில் கொண்டு சேர்த்தது.
மேலும் ஏற்கனவே எழுதியதுபோல் இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவக்கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும், சர்வாதிகாரப்போக்குடைய அதிகாரமுடைய ஆட்சியிருப்பதால், கொஞ்சம் ஸ்தம்பிக்கக்கூயதாக இருந்தது. ஏன்பதனை 2006ல் விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, தமிழர்களுடைய பங்களிப்பென்பது, முப்படைகளிலும் சொத்தைகளாக இருந்தாலும், பணத்திற்காகப் பங்களிப்புச் செய்தேரை கடந்தகாலத்தில் அரசு தண்டித்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு பெரும் குழப்பம் இலங்கையில் நிகழ்ந்து அதில் ஒருதெளிவுவரவேண்டும். அதற்காகக்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம்தான் கண்டெடுக்கவேண்டும். தற்போது நடைபெறுகின்ற பல சந்தர்ப்பங்கள் தமிழர்களுக்குச்சாதகமாக இருந்தாலும் அதனை பக்குவமாகப்பயன்படுத்த ஆற்றலுடையோரைக் கொண்டிராத காரணத்தால் தமிழர்களின் முன்னேற்பாடுகளும் தேவையற்றுச் சறுக்கிக்கிடக்கின்றது என்பது அப்பட்டமான உண்மையே!!!
இதில் சிரிப்பிற்கிடமென்னவென்றால், பலமிக்க யானை பறக்க நினைத்து “ ஜீகும்பா” செய்து பட்சியாகியதே!!!. படாத பாடுபட்டடு எதிர்கட்சித்தலைவர் தேடிப்பிடித்த தேர் சக்கரம் இல்லாது நகரமறுக்கின்றது. பொறுத்த இடத்தில் அவர்களில் பலர் குத்துக்கரணம் அடிக்கப்போகின்றனர். அது பற்றி இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
சிறீலங்கா அரசில் தமிழர்களின் அரசியல் பலம் அதிகரிக்கவேண்டும். இன்று அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு போதியளவு விஸ்தரிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, பலர் பின்தங்கிய நிலையில் இருந்து, சுயதொழில் அபிவிருத்திமூலமும் அரசின் உதவித்தொகை மூலமும் முன்னேறிவருகின்றார். கடந்த காலத்தில் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி அபரவிதமான முன்னேற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. இன்னும் சில மாதங்களுக்குள் இலங்கையின் மிகச்சிறந்த சுற்றுலா பயணிகளின் வருமானத்தைக்கொடுக்கின்ற பகுதிகளாக அப்பகுதிகள் அமைந்து, அரசிற்கு ஏராளம் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்போகின்றது. இதன் மூலம் மக்களும் தொழில்வாய்ப்புக்களையும் முன்னேற்றத்தையும் அடைவதோடு முன்பு நடந்த துன்பவியல் சம்பவங்களில் இருந்து மீண்டு, மீண்டும் பழைய உரிமையுடைய சுதந்திரவாழ்க்கைக்குத்திரும்பப்போகின்றார்கள்.
தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் முன்னேற்பாடான பாரிய திட்டங்கள் சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் கைகொடுக்கும்போது, முப்பது வருட அழிவுகளையும் மூன்றுவருடத்தில் மீழக்கட்டியெழுப்பிவிடலாம். இன்று கிழக்கு மாகானத்தின் பல்வேறு கீழ்மட்டத்தில் உள்ளவர்களை தரம் உயர்த்துவதற்கான ஏராளமான முன்னேற்ற பாதைகளை அம்மான் எடுத்துவைத்துள்ளார். கடந்த காலங்களில் அவர் தலைமையில் கிழக்கில் நடந்த நிகழ்வுகள் அவற்றை உறுதிப்படுத்துகின்றன. சில இணையங்களும், பல தொடர்புச்சாதனங்களும் அவற்றை வெளியிடாது, புலத்தில் இருப்பவர்களுக்கு அத்தகவல்களை கொண்டுசெல்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, அம்மானுடைய நிலை உயரவிடாது, தவறான வதந்திகளையும் வெளிக்காட்டி வருகின்றனர். இவர்கள் தமது சாதாரண நிலைக்குவரவேண்டும். தமிழர்களின் விடுதலையும், சுயநிர்ணய உரிமையினையும், அவர்களுக்குக்கிடைக்கவேண்டிய சகலவிதமான முன்னேற்ற பாதையில் கொண்டு சேர்க்க ஒருமித்த “தமிழ்த் தேசியத்தைக்” கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.
எனவே இன்னும் சிறிதுகாலத்தில் அவ்விணைந்த தமிழ்த்தேசியம் கட்டுப்பட்டுவிடும். அதன்பின்னர், தவறான பாதையில் செல்பவர்கள் மக்கள்மத்தியில் இருந்து தானாகவே ஒதுக்கப்பட்டுவிடுவார்கள். அவர்கள் தாமும் தம்முடைய பாதைகளைத்திருத்தாது, மக்களையும் நிம்மதியாக அகத்திலும் புலத்தில்கூட வாழவிடாது தவறான பாதைகளைக் காட்டிக்கொடுக்கின்றனர்.
எனவே, ஒருங்கிணைந்த சர்வதேசத்தமிழ்த்தேசியத்தைக்கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு உங்கள் இவ்வாக்கத்தின் மூலம் அறைகூவல் விடுகின்றேன்.
இன்று தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் இன்றுள்ள நிலை மேலும் இலங்கை அரசில் முன்நிலையில் அமைந்த இலங்கையின் பலம்பொருந்திய அதிகாரம் அவரிடத்தில் கைசேர, அனைத்துத்தமிழர்களும் வடக்குக்கிழக்கு என்ற வேறுபாடில்லாது, கட்சிபாகுபாடின்றி, இன மொழி மத பிரிவுகளை விடுத்து ஒருமித்த சமூகமாக புதிய அரசைக்கட்டியெழுப்ப அவருக்குக்கைகொடுப்போம்.
தமிழர்களுக்கொரு இளைய தலைவர் தேவையாக இருக்கின்றது. அது, அனுபவமும், அரசியலும், ஆதரவும், பலமும், இருப்பதோடு குறிப்பாக மக்கள்நலன் மட்டுமே முன்நிறுத்தக்கூடிய மனிதனாக இருக்கவேண்டும். அது அம்மானுக்கு நிறையவே இருக்கிறது என்பதனை அவர் உறுதிப்படுத்தி காட்டவேண்டும். மென்மேலும் அவரின் பாதைகள் செம்மைப்பட தமிழர்கள் மேலும் அவருக்குப் பக்கதுணையாக இருக்கவேண்டும்.
அவரின் அடிகளே தண்டனைக்குரியவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் சமுதாயத்தில் அடியெடுக்க அவரின் பங்களிப்பு மிக அதிகமாகக்காணப்படுகின்றது…
“இலங்கை அதிபரின் அரசியல்த் திட்டம், தமிழர்களை பிரித்து இலங்கையை ஆட்சி செய்வதே. அதாவது, கிழக்கு மாகானத்தை அதிகாரமற்ற முதலமைச்சர் பிள்ளையான் கையில் ஒருபுறமும், வடக்கை அமைச்சர் டக்ளசிடம் மறுபுறமும், கருணாவை மத்தியில் தனக்கருகே, தீவிரவாதத்தில் இருந்தவருக்கும் தலைமைப் பதவி கொடுத்துவைத்து, மறுவாழ்வு அளித்துக் கௌரவிக்கின்றேன் என்று மறுபுறமும், கூட்டணியினரை தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதி என்று அவர்களிடம் பேச்சுக்களை நடாத்தி நடுப்பகுதியிலும் இன்னொரு புறம், என்று பிரித்தாள முயற்சிக்கின்றார். இதற்கிடையில் இருக்கும் சிறிய தமிழ்க்கட்சிகளையும் அவ்வப்போது கண்காணித்து அவர்களையும் உசுப்பேத்துகின்றார். தமிழர்கள் பலம் அதிகரித்தால் அவர்கள் நாளை இலங்கையை ஆழக்கூடிய வாய்ப்புண்டென்று அவர் நன்கு அறிவார், இல்லை மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும் வாய்ப்புண்டு என்பதும் அவர் திண்ணம். இதற்கு இரண்டு வழிகளில் உற்றுநோக்கலாம். அதாவது, இன்று தமிழ் முஸ்லீம் மக்கள் மலையக மக்கள் போன்றோர் இணைந்தால், பலமுள்ள சிங்கள அரசியல் கட்சிகள் போல் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவரைக்கொண்டிருக்கும். மற்றையது, சிங்கள கட்சிகள் பிரிந்து செயற்படுவது தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் இன்னொருபலமாகக்காணப்படுவது.
இலங்கை அரசில் தமிழர்களின் பலம் ஓங்கவேண்டும். இதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். கிழக்குமாகான முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பு மேலுமுள்ள தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் கட்சிகள் மலையகக்கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும். “உலகத் தமிழ்த் தேசிய கட்சியாக” அக்கட்சி செயற்படவேண்டும். இதன்மூலம் தமிழர்களின் அரசியல் தந்திரம், இலங்கை அரசில் கால்பதிக்கவேண்டும். அதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக இலங்கை அடிப்படை-யாப்பில்- கைவைக்கமுடியும் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.”
இவ்வாறு பலவருடங்களாக எனது அடிப்படை ஆக்கங்களில் எழுதிவருவது வாசகர்களான உங்களுக்குத்தெரியும். இதனை தற்போது தமிழர் கூட்டமைப்பு நன்கு புரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, ஆரம்பத்தில் “மலருமா தமிழீழம்” என்ற நாலலூடாக தமிழர்களுக்கான பல வழிகளை எடுத்துரைத்ததினை புலத்திலிருந்து இயங்கும் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் கையாண்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அடுத்தகட்டமாக கூட்டமைப்பிற்கும், நாடுடந்த தமிழீழம் அமைக்கும் செயற்பாட்டிற்கும் வித்திட்ட வழிமுறைகளை ஆணித்தனமாகத்தெரிவித்த அந்த நூலில் தமிழர்களின் பலம் தொடர்பாகவும் பலவீனம் தொடர்பாகவும் திடமாக எழுதப்பட்டிருந்தது. இப்போது கூட்டமைப்பினர் முஸ்லீம் கட்சிகளை வால்பிடிப்பதில் இருந்து அத்திட்டத்தையும் கையான முனைகின்றனர். கையாள முனைவது தொடர்பாக பெரிதாகப்பேச வரவில்லை. அவர்கள் அதனைச்செய்யவேண்டும் என்பதற்காகவே பலதடவைகள் இணையத்தின் மூலமாகவும் வெளியிட்டேன். ஆனால் முஸ்லீம் கட்சிகள் இப்படியொரு வினாவை கேட்டால் கூட்டணியினரின் பதில் என்ன? அதாவது, எம்மை இணையும்கடி கேட்கின்றீர்கள், முதலில் தமிழர்களான உங்களிடம் இருக்கும் பிளவினை மறந்து இணையாத நீங்கள், ஒற்றுமையாக நிம்மதியாக அரசில் அங்கம்வகிக்கும் எங்களுடன் எப்படி தொடர்ந் செயற்படுவீர்கள் என்று நம்புவது?
இதற்கு கூட்டமைப்பினர் மூக்குடைந்து நிலத்தில் விழுந்து செல்வார்கள். சாக்குப்போக்காகப்பதில் சொன்னாலும் இது உண்மையான வினாவே. தமிழர்களின் போராட்டத்தில், தாம் போராட்டம் இல்லாமலே தம்முடைய இனத்திற்கு விடிவினை ஏற்படுத்துகின்றவர்கள் முஸ்லீம் மக்களே! என்றும் பலதடவைகள் எழுதியுள்ளேன்.
விரைவில் முஸலீம் மக்களிடம் கிழக்குமாகானம் பறிபோகும்… தமிழர்களின் போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு நிரந்தர தாய்நிலத்தை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தமிழர்கள் தந்தை செல்வா சொன்னதுபோல் யாராலும் காக்கமுடியாத இனம்… காரணம் தமிழர்களுக்குப்பிரச்சனை, சிங்கள அதிகாரிகளோ அல்லது இலங்கைச்சட்டமோ அல்லது வெளிநாடுகளோ அல்ல … அவர்களுடைய சிக்கல் அவர்களே!!! துலைக்கணமும் ஒற்றுமையின்மையுமே. ஆதனை இம்முறை நடக்கும் தேர்தல்மூலம் உடைத்தெறிந்து ஒற்றுமையினைக்காட்டவேண்டும்.
அரசில் அங்கம்வகித்தால் மட்டும் அரசியல்வாதிகளாகிவிடலாமா? புலிகள் ஆயதத்தால் போராடிய முறையினை தற்போது, கூட்டணியினர் அரசியலால் போராட முனைகின்றனரேயொழிய, தமிழர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும், மற்றும் இலங்கை அரசிடம் இருந்து தமிழர்களுக்குக்கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகவும் இயங்கவில்லை என்பது திண்ணம். ஏதோ இப்போதுதான் புதிய இனமாக தமிழர்கள் தோன்றியது போலும், தமிழ்க்கட்சிகள் இப்போதுதான் ஆரம்பித்தவை போன்றும் செயற்படுகின்றன…
இன்னொரு முக்கிய விடயத்திற்காகவே இவ்வாக்கம் எழுதப்படுகின்றது. அதாவது, முன்பே எனது ஆக்கங்களில் எழுதிய விடயமேஇது… தமிழ் உலகத்தின் பலபாகங்களில் இருக்கின்றது… பல அரசினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது… சிலநாடுகளில் அரச மொழியாகவும் காணப்படுகின்றது… ஆனால்; தமிழர்களின் சார்பில் உலகரீதியிலும், நாடுகள்ரீதியிலும் பேசப்படும்போது, ஏன தமிழ் மொழி பேசப்படுவதில்லை? ஐ.நா. சபையில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?…
தமிழ் வெறும் பேச்சுமொழியாக இருக்கும்மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை… அது எப்போது ஒரு இனத்தின் மொழியாக அமைகின்றதோ அப்போது, அதற்குத் தனி இடம் கிடைத்தே ஆகும். நடிகர் கமலகாசன் சிறந்த நடிகராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார்விருது கிடைக்கவில்லை, இளையராஜ சிறந்த இசையமைப்பாளராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை… ஆனால் ரகுமான் அவர்களுக்கு விருது கிடைத்ததென்றால் அவர் வேற்றுமொழியில் தன்னைப்பிரபல்யப் படடுத்தியதே! எப்போது தமிழ் பிறநாட்டுமக்களிடத்திலும் புகுத்தப்படுகின்றதோ அப்போது, அது அதிகமாக கண்காணிக்கப்படுகின்ற இனமாகக்காணப்படும். திருக்குறள் தமிழில் கற்றோரிடத்தில் மட்டுமே தங்கிநிற்கின்றது, ஆனால் அது பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் அதன்மூலம் தமிழர்கள் வெளியில் வரவில்லை. காரணம் தமிழர்களுக்கு பிறநாட்டவர் கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையினையும் தமிழர்கள் கொடுப்பதில்லை. பிறநாட்டு மொழியில் இருப்பதனை தமிழில் மொழிபெயர்த்து பேர்வாங்க முன்வரும் அளவிற்கு, தமிழர்களின் படைப்பைப்பேசிப் பேர்வாங்க முன்வருவதில்லை… இன்றில் இருந்து புதிய சிந்தையில் எம்மை நாம் வழிநடத்த ஒரு பொறி இந்தத்தேர்தல்… இதனைத் தக்கவிதமாகப்பயன்படுத்துவோம்…