Archivio delle Categorie: அருகனின் பதில்கள்

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Leggi l’articolo completo

வரிக்கழிவுப் பணத்திற்கான விண்ணப்பங்கள் – MODELLO 730/2011 redditi 2010

imageஇந்த மாதம் (31/05/2011) 31ம் திகதிக்குள் அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய வரிக்கழிவுப் பணத்திற்கான விண்ணப்பங்கள்  (730 / 2011) செய்தாகவேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும். விண்ணப்பிக்காதவர்கள் அதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்து நன்மை அடையும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

நாமும் விண்ணப்பிக்கலாமா என சந்தேகமுள்ளவர்கள்  பரிட்சித்துப்பார்ப்பதற்கு வழமைபோல் தொடர்பு கொள்ளலாம். (3204031624 – Maxcy)

மகிந்தவிற்காகப்போராடும் தமிழ் செயற்பாட்டாளர்கள்…

imageசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்” … என்ற கதையாச்ச எம் தமிழர்களின் செயற்பாடுகள்.

எதை எப்படிச்செய்ய வேண்டும்…, எப்போது செய்ய வேண்டும்…, என்ற சில முறைகள் இருக்கின்றது என்பதனை நாம் தொடர்ந்து மறந்தே வருகின்றோம். நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் விடயம் “வாசகர்கள் ஊடகவியலாளராவதால்” வருகின்ற தொல்லைதான் இவை!

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01) -2

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

Leggi l’articolo completo

P.L.A மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள்-

P.L.A மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள்-

இங்க பாருங்க தமிழர்களே இலங்கை அரசும் ஒரு சில இலாபகாரரும் இணைந்து மேற்கொள்ளும் திட்டத்தின் செயற்பாடுகள் பற்றி தற்போது இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் போராட்ட அமைப்பை ஏராளம் ஆரம்பித்து அதனால் நிறைய இலாபம் அடையலாம் என்பதனைக்கருத்திற் கொண்டு புதிய பிஸ்னஸ் முறை ஆரம்பித்து விட்டது. பிரபாவான பிரபாகரனே போராட்ட முறையை மாற்ற எத்தணிக்கும் போது, கண்டகண்ட ஆக்களின் கூச்சலுக்கு மக்கள் பயந்துவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டஎத்தணிக்கும் தகவல்கள்தான் இவை… பின்னுள்ள பகுதி சில இணையத்தில் வெளிவந்தவை…  மேலும் வாசிக்க »

ஈழத்தமிழர்களின் துரோகி என்ற பெயர் யாருக்குப் பொருந்தும்…

முன்னாள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போக்கிற்கு எதிராக இருந்த அனைவரையும் துரோகிகள் என்று வசைபாடிய புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளின் உறுப்பினர்களும் இன்று எவ்வாறு தமது பாதைகளை திருப்பியுள்ளார்கள் என்பதகை கண்காணிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் நலன்கருதி தமிழர் ஆதரவாளர்களால் எடுக்கப்பட்ட அனைத்தையும் கண்டித்தும், தண்டித்தும், மக்கள் மத்தியில் எதிர்ப்பையும்தூண்டிவந்த பிரபாவின் ஆதரவாளர்கள் இப்போது,  இருதலைக்கொள்ளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பிரபாகரன் உயிருடன் இருந்தால், பத்மனாபனும் துரோகியாக்கப்பட்டு உயிரை மாய்திருப்பார், நெடியவனும் துரோகியாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருப்பார், உருத்திரகுமாரும் துரோகியாக்கப்பட்டிருப்பார்… இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்ள முடிகின்றது? இதனை ஏற்கும் முன் நாம் காலத்தைப்பின்நோக்க வேண்டும்… மேலும் வாசிக்க »

நாடு கடந்த தமிழீழ அரசு???…

நாடு கடந்த தமிழீழ அரசு???…

Posted on நவம்பர் 19, 2009 by தேசியம்

 UNGAன் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”???

மலரும் மா தமிழீழம்!,?”

சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 – நாவலில் இருந்து)

“அடிதடி 13”

ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும்

இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது.

இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக  பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும். மேலும் வாசிக்க »

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் – Malarum Ma Thamileelam…

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் – Malarum Ma Thamileelam…

 

2006ம் ஆண்டு அருகனால் எழுதப்பட்ட விடயத்தை மெருகூட்டப்பார்க்கின்றனர் புலத்தில் பேரவையாளர்கள்- ஆனால் அதுதம்முடைய உதயமாக எடுத்தியம்புகின்றனர். அதன் ஆக்கம் கீழேதரப்படுகின்றது. “மலரும் மா தமிழீழம்” என 2008ல் இது நூலாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

“அடிதடி 14”

http://it.calameo.com/read/0000948120aaf09622d82

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது.

 எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்… தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது.

மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர்…, ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன்.

அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம்,நிறையவே இருக்கிறது… ஆழமாகவே கிடக்கிறது. அதாவது, இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ, அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும் வாசிக்க »

மிக்கமகிழ்ச்சி எரிமலை இணையத்தள ஆசிரியரே!!!

மொட்டைக்கடிதத்தின் மூலம் தனது முட்டாள்தனத்தைக் காட்டிய கைக்கூலிக்காக எழுதப்பட்ட மடல் வரவேற்கத்தக்கதாக இருந்தது. முன்பு தங்கள் தளத்தில் எழுதப்பட்ட முறையற்ற வார்த்தைப்பிரயோகத்தையிட்டு என்னால் எழுதப்பட்ட விமர்சனத்திற்கமைய தங்கள் இணையத்தில் போக்கு மாற்றப்பட்டிருப்பதையிட்டு எழுத்தாளர்களான எமக்குப் பெருமையே! இப்போது, குற்றச்செயல்களிலும், அரசிற்கெதிராகவும், மக்களை குழப்பி தாம் குளிர்காய்வோருக்கும் தங்கள் தளம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பது திண்ணம். அவ்வாறான ஆக்கத்தை அதிலும் முறையான வார்த்தைப்பிரயோகங்கள் மூலம் குற்றவாளிகளின் மூக்கையும் உடைத்ததோடு, தமிழ்ப்பண்பையும் காட்டியுள்ளீர்கள். ரணீலின்-கைக்கூலி-பப்டிஸ்

Erimalai.org  என்ற இணையத்தளத்தில் சென்ற ஒக்டேபர் இரண்டாம் திகதி பிரசுரமாகியிருந்த  ஒரு கைக்கூலி தொர்பாக அப்பட்டங்களை முன்வைத்தாலும், அதனை முன்வைத்த முறை தமிழர்களின் மற்றும் எழுத்தாளர்களின் பண்பை நிலைநாட்டியதோடு, குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது.

குற்றச்சாட்டுகளை எத்தனைதூரம் வெளிக்காட்ட முனைந்தேனோ அத்தனைதூரம் பாராட்டவும் பின்தங்கமாட்டேன். மக்களுக்குத் தாங்கள் வெளிக்கொணரும் களவாடிகளின் ஈனச்செயல்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும். அது யாராக இருந்தாலென்ன!!! இவ்வாறான அறிக்கைகள் வரவேற்கத்தக்கது, அத்துடன் மக்கள் குற்றவாளிகளை இனங்கண்டு சுற்றவாளிகளை ஆதரிக்கவும் துணைபுரிகின்ற உங்கள் சேவை பாராட்டக்கூடியது.

ஒரு எதிர்க்கட்சி, அரசின் தவறான திட்டங்களை விமர்சித்து சரியான வழிக்கு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துணைபோக வேண்டுமேயொழிய, அரசைக்கவிழ்ப்பதற்கோ, அரசின் சரியான திட்டத்தை முறியடிப்பதற்கோ நடவடிக்கைகளை மேற்கொள்வது தகுந்ததல்ல என்பதனை எதிர்க்கட்சித்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதற்காக பிற கட்சிகளை இணைப்பதிலும் பார்க்க அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி தேசியத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டாலே அடுத்த தேர்தல்களில் மக்களின் பார்வை பதியப்படும் என்பதனை எதிர்க்கட்சித்தலைவர் இத்தனை அரசியல் சதுரங்கத்தை பார்த்தும் புரிந்து கொள்ளவில்லைபோலும்.

மேலும் “உங்களுக்கு ஞாபகம் இருக்கும் நாங்கள் முன்பொருதடவை உங்களுக்கு இப்படியான செயற்பாடுகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி சந்தர்ப்பம் வழங்கியிருந்தோம்இ ஆனால் நீங்கள் திருந்தவும் இல்லை மனம் வருந்தவுமில்லை. எவராக இருந்தாலும் நடந்துவந்த பாதைதன்னை திரும்பிப்பார்க்க வேண்டும்இ அப்படி திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு கசப்பான அருவருப்பான வரலாறுகளைக் கொண்டிருக்கும் நீங்கள்இ உங்களுடைய எஜமான் ரணிலின் கயிறுகளை விழுங்கிக் கொண்டு எமது மாநகரசபையைக் குழப்பியடிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.” என்று குறிப்பிட்டிருப்பது, மக்களின் கூக்குரலாகவே நான் கருதுகின்றேன். அதாவது, ஏற்கனவே புண்பட்டிருந்த மக்கள் இப்போது ஆறுதலை எதிர்பார்க்கின்றனர்.

அது இன்றுள்ள இந்த அரசாங்கத்தின் போக்கிலும் மட்டு மானகரசபையின் செயலிலும் திருப்திகொண்டுள்ள மக்கள் தமக்கு எதிராகச்செயற்படுவோரைக்கண்டு விடும் எச்சரிக்கையாகவே எனக்குப்படுகின்றது. அதாவது, கடந்த காலங்களில் மட்டுமுதல்வர் தலைமையிலும் அமைச்சர் வி. முரளிதரன் தலைமையிலும் பல்வேறுபட்ட அபிவிருத்திநடவடிக்கைகள் மற்றும் கல்வி, கலை, கலாசார முன்னெடுப்புக்களை கண்டு திருப்திகொண்ட மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த புன்னுருவிகள் செய்யும் செயல்களே இவ்வாறான என்பதனை மக்கள் நன்குபுரிந்துகொள்கின்றனர்..

மென்மேலும் இவ்வாறான குட்டுகளை புட்டுப் புட்டாகவைக்க, கட்டுக்கட்டான வாழ்த்துக்களை மக்கள்சார்பில் கொட்டிக் கொட்டித்தருகின்றேன்.  – அருகன். 

தடைசெய்யப்பட்ட தமிழ்நேஷன் மீண்டும் புதிய பரிநாமத்துடன்

 
2006ல்எழுதப்பட்டு 2007 உதயமாகுமா தமிழீழம் என்ற பெயரில் தமிழ்நேஷன் வெப்பில் வெளியிட்ட அடிதடியின் தொகுப்பே இன்று "மலருமா தமிழீழம்" என்ற நாவலின் பிறப்பிற்கு அத்திவாரம். இத்தளம் மீண்டும் செயற்படத்தெடங்கியிருக்கின்றது வரவேற்கத்தக்கது.
 
எனினும் சில மாற்றங்கள் ஏற்படுத்தியவர்கள் ஏன் மாற்றத்திற்கான காரணத்தைப்புரிந்து கொள்ளவில்லை???.
 
இவர்கள் எனது எழுத்துக்களை ஒதுக்கியதன் காரணமே எனது தளம் வலுப்பெற்றது நன்றி அமைப்பாளர்களே!. இனியாவது அறிவுடையோருக்குத் தகுந்த மதிப்பளிப்பீர்கள் என்று நடம்புகின்றேன். -தங்கள் முன்னாள் எழுத்தாளன் திரு. அருகன்