Archivio delle Categorie: இத்தாலிய சட்டமாற்றங்கள்

இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு…

Patente Italianoஇத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.

Leggi l’articolo completo

வரிக்கழிவுப் பணத்திற்கான விண்ணப்பங்கள் – MODELLO 730/2011 redditi 2010

imageஇந்த மாதம் (31/05/2011) 31ம் திகதிக்குள் அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய வரிக்கழிவுப் பணத்திற்கான விண்ணப்பங்கள்  (730 / 2011) செய்தாகவேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும். விண்ணப்பிக்காதவர்கள் அதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்து நன்மை அடையும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

நாமும் விண்ணப்பிக்கலாமா என சந்தேகமுள்ளவர்கள்  பரிட்சித்துப்பார்ப்பதற்கு வழமைபோல் தொடர்பு கொள்ளலாம். (3204031624 – Maxcy)

flussi stagionali!!!!!!????? (decreto 2011)

Il governo ha già firmato il decreto flussi 2011, ora si attende che arrivi in Gazzetta Ufficiale per dare il via alla presentazione delle domande. Rispetto all’anno scorso, quando furono 80 mila, gli ingressi autorizzati sono calati del 25%, ma secondo le associazioni dei datori di lavoro riusciranno comunque a soddisfare tutte le richieste.

“2011 Flussi” “Colf / Badanti” புதிய சட்டத்திற்கு முன்னர் அறிந்து கொள்ள வேண்டியவை!!!???

permesso-soggiornoவரவிருக்கும் புதிய சட்டத்திற்கு முன்னர் அறிந்து கொள்ள வேண்டியவை!!!???

வணக்கம் இத்தாலி வாழ் தமிழர்களே!!! அவசியம் அறிந்திருக்க வேண்டியவை

இத்தாலி அரசு வெளிநாட்டவர்கள் மத்தியில் பலத்த அழுத்தங்களைக் கொடுக்க அதி வேகமாகச் செயற்பட்டு வருகின்றது.

எனவே தமிழர்கள் பலவருடமாக இத்தாலியில் வாழ்ந்தாலும் ஆவணங்கள் மற்றும் அரச வரி, கட்டணங்கள், நிலுவைகள் போன்றவற்றில் அக்கறை குறைந்திருப்பதன்காரணத்தால் பலர் தமது எதிர்காலத்தை பாதிப்பிற்குள்ளாக்க நேரிடும் என்பதனை இப்போதே எச்சரிக்கின்றோம்.

Leggi l’articolo completo

வங்கி அட்டைகளைப்பயன்படுத்தி வைப்பிலும் இடலாம்…

வங்கி அட்டைகளைப்பயன்படுத்தி வைப்பிலும் இடலாம்… (Italy)
“தானியங்கி” முறை மூலம்  வங்கி அட்டைகளை வைத்து பணத்தை மீளப்பெறுகின்ற முறை பலகாலமாக இருந்து வந்த போதிலும், ஒரு குறிப்பிட்ட, மற்றும்  வங்கியால் அனுமதிக்கப்பட்டவர்கள்  மட்டுமே வைப்பில் இடுவதில் ஈடுபட்டுவந்த போதிலும், அவை ஒரு சில இயந்திரங்களில் மட்டுமே பாவகைக்கு இருந்தது. ஆனால் இப்பொது வங்கி அட்டைகளை வைத்திருக்கும் அனைவரும் தானியங்கி இயந்திர முறையில் வைப்பிலிடவோ அல்லது பணத்தை மீழப்பெறவோ முடிகின்றது. இம்முறை காலப்போக்கில் அனைத்து வங்கிகளும் பயன்படுத்த இருக்கின்றபோதிலும், பல வங்கிகளை தன்னகத்தே கொண்டுள்ள “யூனிக் கிறடிற்” என்றின்ற வங்கி நடைமுறைக்கு கொணர்ந்துள்ளது.
இதன்மூலம் ஏராளம் நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வதோடு, வங்கியின் செலவினங்களும் தவறுகளும் குறைக்கப்படுகின்றது. இதன்மூலம் நாமும் எமது நேரத்தை மீதப்படுத்துவதோடு, பாதுகாப்பு, நம்பிக்கை, விரைவு, எந்த சேரத்திலும் பணன்படுத்தலாம், என்கின்ற பல நன்மைகள் அடைய வாய்ப்புண்டு… எனவே தமிழர்கள் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள இச்சிறு போக்குகள் கைகொடுத்தாலும் கொடுக்கலாம். சிறுதுளியாகச் சேர்க்கப்படுகின்ற நேரம் மற்றும் செலவினங்கள் மொத்தமாக எமது வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் அதிகரிக்கும்…    

Rinnovo del Permesso di Soggiorno – Tamil

இத்தாலி வாழ்தமிழர்களே, தாங்கள் விண்ணப்பித்த விசாக்களை தனிநபர்களின் ஆலோசனையின்பெயரிலும் சட்டத்தரணிகள் ஊடாகவும் மேலதிக பணத்தைச் செலவளிப்பதுடன் நேரத்தையும் விரயம் செய்கின்றீர்கள். எனவே தகுந்த ஆலோசனை தரக்கூடியவர்களிடமும், சேவையினை சீராக மேற்கொள்கின்ற அலுவலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். விசாதொடர்பாக முதலாவது தடவை அழைக்கப்பட்டோர்கள் பின்வரும் பகுதியை அழுத்தி அங்கு உங்கள் பற்றுச்சீட்டில் 0607… என்று தொடங்கும் இலக்கங்களை மட்டும் அழுத்திப்பார்த்து விசா ஆயத்தமா என்று பார்த்தபின்னர், அதனை மீட்பதற்கு எப்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை பின்வரும் பகுதிக்குச்சௌன்று பார்வையிடலாம். இதற்கு யாருக்கும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை.  மேலதிக விபரங்கள் தேவைப்படின் 3204031624 என்ற இலக்கங்களுடன் அல்லது தகுந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளவும். – அருகன்.
 
1) விசா ஆயத்தமா என்று பார்க்க -                            ******
 
2) விசாவை மீட்பதற்கான நாளை அறிவதற்கு-       ****** 
 
 

இத்தாலியில் வீட்டுக் கடன் பெற்றோருக்கான புதிய சட்டம்.

இத்தாலியில் வீட்டுக் கடன் பெற்றோருக்கான புதிய சட்டம்.

இன்று உலகம் முழுதையும் தாக்கியுள்ள தொழில் சிக்கலினால் மக்கள் அதாவது, தொழிலாளர்கள் படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, இத்தாலி அரசு புதிய சட்டமொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வீட்டுக்கடன் பெற்றோர்கள் தற்போதைய சூழ்நிலையில் அதனைத் தொடர்ச்சியாகக் கட்ட முடியாது, திண்டாடுகின்றனர். இக்காரணத்தால், அவற்கை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசு சட்டத்தை அமுல்ப் படுத்துகின்றது. எனவே வீடு பறிபோகும் நிலையில் இருந்து இது மக்களைக் காத்துக் கொள்கின்றது. எனவே, இவ்வாறான நிலையிலுனள்ளவர்கள் தத்தமது வங்கியினை அணுகி மேலதிக விடயங்களை கைக்கொள்ளுமாறு எமது ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

ஒன்றிய தகவல் பிரிவு 

இத்தாலியில் தமிழர்களின் நலன்கருதி செயற்படும் ஒரே அமைப்பு UNGA

தொழில்கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள்…

IMG_0080 IMG_0038 IMG_0039 IMG_0041 IMG_0079 17ம் திகதி ழக்டோபர் மாதம் இத்தாலி றோம் நகரில் நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் சார்பில் கலந்துகொட்டு எமது உரிமைகளை காக்க கோரிக்கை விடுத்தோம். இத்தாலி அரசின் பலத்த கெடுபிடியான வெளிநாட்டவர்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் எமது தமிழர்களும் கலந்து கொண்டனர். ஆதன் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றதோ, எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தேதீரும். ஆனால் அது சர்வதேச சமுகத்திற்குப்பொருத்தப்பாடுடையதாகவும் உள்நாட்டு சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கும்போது, அது தீர்த்துவைப்பதற்கான வீதாசாரம் 75வீதத்திற்கும் அதிகம் சாதகமாக இருக்கும் என்பது உறுதி. இதன் அடிப்படையில் இன்றுவரை இத்தாலியில் பல்வேறு போராட்டங்களை நடாத்தி அதற்குச் சாதகமான பதிலை அரசிடம் இருந்து பெற்றுள்ளோம் அதன் உறுதியிலேயே இதன் கருத்து ஆதாரமாகத்தரப்படுகின்றது.  

வீட்டுக்கதவைத்தட்டும் வீசாச்சட்டங்கள்…

இந்த மாதம் 30ம் திகதியுடன் இத்தாலியில் விசா இல்லாது வசிப்போருக்கான விண்ணப்பமுடிவுதிகதி என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். விசா அற்று இருப்போர்கள் தங்களை சட்டத்திற்குள்ளாக மாற்றிக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பம் நழுவவிடவேண்டாம். விசா இன்றி காவல் அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டோரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலதிகத்தொடர்புகளுகஇக… வழமைபோல் நாடவும்.

வீசா வழங்கும் திட்டமானது வருகின்ற மாதம் 1ம் திகதிதொடக்கம்

இத்தாலியில் புதிதாக வீசா வழங்கும் திட்டமானது வருகின்ற மாதம் 1ம் திகதிதொடக்கம் 30 திகதிவரை இடம்பெறவுள்ளதனை ஏற்கனவே எமது தளம் பலதடவைகள் தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் றெஜியோ மாவட்டத்தில் இதற்கான ஆயத்தங்கள் பூர்த்தியாகிய நிலையில் உள்ளது. அதுபோலவே மற்றைய மாவட்டங்களிலும் உள்ள தமிழர்களுக்கு எமது ஒன்றியம் ஆலோசனைகளையும் இதற்கான விண்ணப்பங்களையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளது உலகின் அனைத்துப்பாகங்களிலும் வீசாவற்று இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்தும்படி பலமாதங்களுக்குமுன்னரே அறிவித்தமைகுறிப்பிடத்தக்கது. உலகின் அனைத்துப்பாகங்களிலும் இருக்கும் தமிழர்கள் பால் கவனத்தினைச்செலுத்திவரும் எமது ஒன்றியமானது, ஈழத் தமிழ்மக்களின் நலம், எதிர்கால விடிவு என்பதற்காகப் பலமாகப்பாடு படுகின்றது. எமது ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவிரும்பும் தமிழர்களின் நலன்விரும்பிகள் வரவேற்கப்படுகின்றனர். உலகின் எப்பாகத்தில் இருப்போரும் எம்முடன்தொடர்பு கொள்ளலாம் தொடர்புகளுக்கு arugan@hotmail.it  மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.