Archivio delle Categorie: தமிழீழப் பாதையில்

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Leggi l’articolo completo

இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு…

Patente Italianoஇத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.

Leggi l’articolo completo

தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி! | Saritham News : சரிதம் செய்திகள்

தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி! | Saritham News : சரிதம் செய்திகள்

viaதமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி! | Saritham News : சரிதம் செய்திகள்.

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01) -2

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

Inserisci qui la didascalia video

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

வரலாறு தொடர்பாக ஆதாரங்காட்டி எழுதும் எழுத்தாளர்கள், மற்றும் விமர்சகர்களுக்கு ஈழத்து வரலாறே படிப்பினையாகவும், நடைமுறை ஆதாரமுமாக இருக்கும் போது அந்நிய வரலாற்றில் பாடங்கற்பிப்பது தேவையற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.

இன்றைய நடைமுறையிலேயே பல உண்மைகள் வெளிப்படாமல் இருக்கும் போது, பலவருடங்கள் கடந்த அதிலும் அந்நிய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் மட்டும் எப்படி உண்மையானது என்று ஆதாரங்காட்ட முடியும் என்ற கேள்வி எழவில்லையா?… சந்திரிக்கா அம்மையார் உயிருடன்தான் இருக்கின்றார், மகிந்தவும் உயிருடன்தான் இருக்கின்றார், புலிகளின் பல தலைவர்களும் புலிகள் அமைப்பின் பல முப்கியஸ்தர்களும் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றார்கள்… அப்படி இருக்கும் போது இறுதிக்கட்டப் போரில் நடந்த பல சம்பவங்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்ற போது, அவ்வாறான சம்பவங்களை துருவி ஆராய்ந்து சரித்திரத்தில் உண்மையினைப்பதிக்க முடியாத ஆராட்சியாளர்கள் பல வருடங்கள் கடந்த பின்னர் ஆதாரங்கள் என்று சொல்லும் அல்லது சொல்லப்போகும் முடிவுகளை உண்மை என்று உறுதிப்படுத்துபவர்கள்யார்???

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சிங்கள அரசு தூக்கி வைக்கப்போவதில்லை, அதுபோல மகிந்தவின் சிறப்புக்களை எப்போதும் புலிகள் இயக்க இயங்கும் உறுப்பினர்கள் மேன்மைப்படுத்தப்போவதில்லை… இப்படி இருக்கும் போது எப்படி உண்மை நிலைக்கும்!!???

கனடாவில் தமிழர்களுக்கிடையில் பிளவு, சுவிஸ் தேசத்தில் அதே போன்று பல பிளவுகள், நாடுகடந்த அரசு என்ற அமைப்பிற்குள் இன்னும் சிக்கல்கள்-பிளவுகள், முன்னாள் புலிகள் அமைப்பினருக்குள் பிளவுகள், தன்னிச்சையாக தமிழர்களுக்கு ஆயிரம் நன்மைகளைச் செய்வோரை ஏற்றுக்கொள்ள மற்றைய அமைப்புக்களும், சாராத தமிழ் ஊடகங்களும் மறுப்பும் மறைப்பும்,
… … இப்படி இருக்கும் போது யார் யாரை வரலாற்றில் பதியப்போகின்றார்கள். அது எப்படி வரலாற்றில் பதியப்படப்போகின்றது.

ஒரு இணையத்தில் தவறுதலாக வெளியிட்ட சம்பவத்தையோ அல்லது செய்தியையோ, திருத்துவதற்கும், தவற்றை ஏற்று மாற்று கருத்தை விடுவதற்கும் இன்றுள்ள எந்த ஊடகம் முன்நிற்கின்றது?

தமிழர்கள் நாம் போராட்டங்களை மேற்கொள்கின்றோம், ஆனால் யாரும் நேரடியாக தலைகொடுக்க மறுக்கின்றார்கள்! சுpங்கள அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வலும் தமிழர்களை பார்த்தால் அவர்கள் வேறு தேசியத்தை உடையவர்களாகக்காணப்படுகின்றார்கள்… மின்னஞ்சல்கள் மற்றும் இணைய நடத்துனர்கள் யாரும் தமது சொந்த பெயரை இட்டதாகக்காணவில்லை. தும்மைப்பற்றி மற்றைய தமிழர்களுக்கு மறைவாக வெளிப்படுத்தவே முயல்கின்றார்கள், அதற்கு பாதுகாப்புக்காரணம் என்ற ஒன்றைக் கூறினால், யாரிடம் இருந்து பாதுகாப்பு என்ற கேள்வி எழுகின்றதல்லவா? … அவ்வாறு இருப்பின் நீதியான கோரிக்கைகளுக்காகப்போராடும் போது ஏன் மறைவாக இருக்க வேண்டும் என்ற இன்னொரு கேள்வியும் வெளிப்படுகின்றதல்லவா? ஒரு தனி அரசை நடாத்திய புலிகள்கூட சர்வதேசத்தில் அதிலும் நோர்வேக்குச் செல்லவோ அல்லது வேறு தேசத்திற்குச்செல்லவோ “தமிழீழத் தேசிய கடவுச்சீட்டை” பாவிக்கவில்லை என்பது பெரும் வேதனையினைத்தருகின்றது!!!.

உலகத்தில் அன்றைய நடைமுறை அரசிற்கு எதிராகச்செயற்பட்ட பல தலைவர்களின் வலறாற்றுப் பதிவு என்று சொல்லப்படுகின்ற ஆதாரங்களைப்பார்க்கும் போது, அத்தகவல்களை மறைத்து வைப்பதற்கே விரும்புகின்றனர். அது அத்தலைவர்களைப் பின்பற்றும் மற்றையவர்களுக்கு ஒரு துணிச்சலையும் அவர்களைச் சான்று வெளிப்படுகின்றவர்களுக்கு ஒரு திடத்தையும் கொடுக்கும் என்ற உளவியல் போக்கே காரணம்.  ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எப்படி வரலாற்றை எதிர்காலத்திற்கு உண்மையாக வழங்கமுடியும்?

கடந்த 2003ம் ஆண்டு எனது நூல் வெளியீட்டின்போது அந்நூலிற்கான விமர்சனத்தை மேற்கொண்ட ஒரு நபர் தனது பேச்சில் “ புலிகளின் தலைவரைப்பற்றி மிகச்சிறப்பாகவும், உயர்வாகவும்” பேசித்தள்ளினார். ஆனால் அந்த பேச்சின் காட்சிகளை 2009க்கு பிற்பட்ட காலத்தில் இணையத்தில் இருந்து அகற்றிவிடும்படி வலியுறுத்தினார்… இதில் இருந்து அத்தலைவனுக்காக அவர் ஏற்கனவே பேசிய வார்த்தைகளிற்கு எத்தனை தூரம் முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்றும் அத்தலைவன்மீது வைத்த விசுவாசம் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்ற சந்தேகம் எழத்தோன்றவில்லையா?

ஏற்கனவே “மலரும் மா தமிழீழம்” என்ற எனது 2007ம் ஆண்டு நாவலில் குறிப்பிட்டது போல் “இவர்களை நம்பியா எமது தமிழீழத்தை இவர்களிடம் ஒப்படைப்பது?” என்ற கேள்வி இப்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதே நூலில் எழுதப்பட்ட இன்னொரு விடயம் நாளை தமிழீழம் மலரும் போது தமிழீழ தூதராலயத்தில் அவ்வாறானவர்களையா அமர்த்தப்போகின்றோம் என்ற கேள்விகளும் எழுகின்றதல்லவா?

தூதராலயம் என்றதும் இடையறுத்த கேள்வி ஒன்று எழுகின்றது! அதுவாகில் நா.க.அ. என்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை ஆரம்பித்துள்ள எமது புத்திஜீவிகள் அதற்கான காரியாலயங்களை ஆரம்பிக்கும் முன்னர் தூதராலயத்தை ஆரம்பித்துள்ளமை சிரிப்பாக உள்ளது! இது அவர்களை கேவலப்படுத்தவல்ல, மாறாக எடுக்கும் காரியங்களில் ஆணித்தனமான அத்துpவாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே! குனடாலில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், பிரித்தானியாவில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், சுவிசில் பெரும் தமிழ் விசுவாசிகள் இருக்கின்றார்கள்… இப்படி இருக்கும் போது அங்கெல்லாம் அலுவலகங்களை அமைக்காமல், அல்லது தூதராலயங்களை அமைக்காமல் எங்கோ கொண்டு தூதராலயத்தை அமைத்தமை திடமற்ற செயலைக்காட்டுகின்றது. மேலும் அத்தூதராலயங்களில் யார் எதை நோக்கி அணுகப் போகின்றார்கள் என்ற கேள்விகளும் உள…
நான் சில அமைப்புக்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றேன். ஆவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதற்கான செயற்பாடுகள் இருக்கின்றன. ஏவ்வாறான செயற்பாடுகளை அவ்வமைப்பு மேற்கொள்கின்றன என்ற வெளிப்படையான ஒரு அறிக்கையே காணப்படுகின்றது. இது இப்படி இருக்க நான் ஒரு தமிழீழப்பிரஜையாக நா.க.அ. அணுகவேண்டி பல தொடர்புகளை மேற்கொண்டு பார்த்தேன். ஆவை ஒன்றுக்குக்கூட பதில் வந்ததாக இல்லை! மேலும் காலத்திற்குக்காலம் ஒரு இணையம், காலத்திற்குக்காலம் ஒரு மின்னஞ்சல்… இது தனது குடிமக்களையே அந்த அரசு அவமதிப்பதாகத்தோன்றாதா?

திரு உருத்திர குமார் அவர்களுக்க ஒரு ஆலோசனை வழங்க முனைகின்றேன். தங்கள் பேச்சில் வசனங்களில் “நான்” என்ன உச்சரிப்பின் ஆரம்பங்களும் நாங்கள் என்ற வசனத்தின் முடிவுகளுமே அதிகமாகக்காணப்படுகின்றது. அவற்றை இனிவரும் தங்கள் பேச்சுக்களின் சீர் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். ஊங்கள் செயற்பாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும் தங்கள் வழங்குகின்ற பேச்சுக்களால் தங்கள் தரம் தமிழில் குறைவென்ற ஐயப்பாடு புலத்தில் வாழ்கின்ற இழையோர் மத்தியில் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே எடுத்க்காட்ட நேர்ந்தது. ஆத்துடன் பல தமிழர்கள் ஊடகங்களில் பேசும் போது சம்மந்தமற்ற இடத்திலெல்லாம் “அதாவது” என்ற பதத்தைப்பயன்னடுத்தும் போது மிகவும் கேவலமாக இருக்கின்றது. தமிழுக்காகப்போராடுகின்றோம் தமிழை பேசுவதில் கோட்டை விடுகின்றோம். அதற்றாக இலக்கணத்தில் அல்லது இலக்கியத்தில் பேசச்சொல்லவில்லை ஆங்கில உச்சரிப்பில் பேசினால் கூட அல்லது ஆங்கிலத்தையோ வேற்று மொழியையோ இணைத்துப் பேசினால் கூட பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைப்பயன்படுத்த கேட்கின்றேன். காரணம் இன்றுள்ள நிலையில் தமிழர்கள் அல்லாத பலர் தமிழை முறையோடு பேசக்கற்றுக்கொண்டிருக்கும் போது தமிழர்கள் தமிழை தவறாகப்பேசிக்கொள்வது முறையாகவா காணப்படும். என்னிடம் பல இத்தாலியர்கள் தமிழ் கற்றுக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கற்கும் போது தமிழர்களிலும் பார்க்க அதிக விரைவாக கற்றுக்கொண்டார்கள் என்றால் நாளை அவர்களிடம் நாம் கற்கவேண்டிய அவல நிலை வந்து விடக்கூடாதல்லவா? உதாரணம் ஏற்கனவே வீரமா முனிவர் மூலம் வரலாறு விட்டுச்சென்ற சம்பவங்கள் உள.  

– தொடரும்

நாடுகடந்த அரசின் மகளீர் தின அறிக்கை இவ்வாறு இருந்தால்???…!!!

animaliநாடுகடந்த அரசின் மகளீர் தின அறிக்கை இவ்வாறு இருந்தால்???…!!!  உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு, எத்தனை பலனுடையதாக அமையும்….!!!

எத்தனை வேதனைகளைக் கடந்து வந்திருந்த போதிலும் ஏதுமே நடாக்காதது போல், அவ்வப்போது அறிக்கைகளும், நிகழ்வுகளும், முடிவுகளும் வந்த வண்ணமே இருக்கின்றன.

Leggi l’articolo completo

நாடுகடந்த தமிழீழம். – நாடுகடத்தப்பட்ட தமிழீழம் (3) | அருகன்.COM

2வருடத்திற்கு முன் வெளியிட்ட அருகனின் மாதிரி அடையாள அட்டை2011ல் வெளியிட்ட நா. க. அ. அ. அட்டைஇந்த ஆக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னர் பல இணையங்களில் வெளிவந்தது. எனினும் சில முக்கிய நபர்களுக்கு இவ்வாக்கம் கிடைக்கவில்லைப் போல் இருக்கின்றது. அதனால்தான் நாடுகடந்த அமைப்பின் அடையாள அட்டையினைப்பார்த்து தற்போது எனக்குச் சிரிப்பு வந்தது. நீங்களும் பாருங்களேன்…

Leggi l’articolo completo

இலங்கை அதிபரின் அரசியல்த் திட்டம், தமிழர்களை பிரித்து இலங்கையை ஆட்சி செய்வதே

normal_03%7E17 “இலங்கை அதிபரின் அரசியல்த் திட்டம், தமிழர்களை பிரித்து இலங்கையை ஆட்சி செய்வதே. அதாவது, கிழக்கு மாகானத்தை அதிகாரமற்ற முதலமைச்சர் பிள்ளையான் கையில் ஒருபுறமும், வடக்கை அமைச்சர் டக்ளசிடம் மறுபுறமும், கருணாவை & KP  மத்தியில் தனக்கருகே, தீவிரவாதத்தில் இருந்தவருக்கும் தலைமைப் பதவி கொடுத்துவைத்து, மறுவாழ்வு அளித்துக் கௌரவிக்கின்றேன் என்று மறுபுறமும், கூட்டணியினரை தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதி என்று அவர்களிடம் பேச்சுக்களை நடாத்தி நடுப்பகுதியிலும் இன்னொரு புறம், என்று பிரித்தாள முயற்சிக்கின்றார். இதற்கிடையில் இருக்கும் சிறிய தமிழ்க்கட்சிகளையும் அவ்வப்போது கண்காணித்து அவர்களையும் உசுப்பேத்துகின்றார். தமிழர்கள் பலம் அதிகரித்தால் அவர்கள் நாளை இலங்கையை ஆழக்கூடிய வாய்ப்புண்டென்று அவர் நன்கு அறிவார், இல்லை மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும் வாய்ப்புண்டு என்பது திண்ணம். இதற்கு இரண்டு வழிகளில் உற்றுநோக்கலாம். அதாவது, உன்று தமிழ் முஸ்லீம் மக்கள் மலையக மக்கள் போன்றோர் இணைந்தால், பலமுள்ள சிங்கள அரசியல் கட்சிகள் போல் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவரைக்கொண்டிருக்கும். மற்றையது, சிங்கள கட்சிகள் பிரிந்து செயற்படுவது தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் இன்னொருபலமாகக்காணப்படுவது. 

இலங்கை அரசில் தமிழர்களின் பலம் ஓங்கவேண்டும். இதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். கிழக்குமாகான முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பு மேலுமுள்ள தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் கட்சிகள் மலையகக்கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும். “உலகத் தமிழ்த் தேசிய ஒன்றியமாக” அக்கட்சி செயற்படவேண்டும். இதன்மூலம் தமிழர்களின் அரசியல் தந்திரம், இலங்கை அரசில் கால்பதிக்கவேண்டும். அதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக இலங்கை அடிப்படையாப்பில் கைவைக்கமுடியும் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.”
இவ்வாறு பலவருடங்களாக எனது அடிப்படை ஆக்கங்களில் எழுதிவருவது வாசகர்களான உங்களுக்குத்தெரியும். இதனை தற்போது தமிழர் கூட்டமைப்பு நன்கு புரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, ஆரம்பத்தில் “மலருமா தமிழீழம்” என்ற நாலலூடாக தமிழர்களுக்கான பல வழிகளை எடுத்துரைத்ததினை புலத்திலிருந்து இயங்கும் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் கையாண்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அடுத்தகட்டமாக கூட்டமைப்பிற்கும், நாடுடந்த தமிழீழம் அமைக்கும் செயற்பாட்டிற்கும் வித்துட்ட வழிமுறைகளை ஆணித்தனமாகத்தெரிவித்த அந்த நூலில் தமிழர்களின் பலம் தொடர்பாகவும் பலவீனம் தொடர்பாகவும் திடமாக எழுதப்பட்டிருந்தது. இப்போது கூட்டமைப்பினர் முஸ்லீம் கட்சிகளை வால்பிடிப்பதில் இருந்து அத்திட்டத்தையும் கையான முனைகின்றனர். கையாள முனைவதுதொடர்பாக பெரிதாகப்பேச வரவில்லை அவர்கள் அதனைச்செய்யவேண்டும் என்பதற்காகவே பலதடவைகள் இணையத்தின்மூலமாகவும் வெளியிட்டேன். ஆனால் முஸ்லீம் கட்சிகள் இப்படியொரு வினாவை கேட்டால் கூட்டணியினரின் பதில் என்ன? அதாவது
எம்மை இணையும்கடி கேட்கின்றீர்கள், முதலில் தமிழர்களான உங்களிடம் இருக்கும் பிளவினை மறந்து இணையாத  நீங்கள், ஒற்றுமையாக நிம்மதியாக அரசில் அங்கம்வகிக்கும் எங்களுடன்  எப்படி தொடர்ந் செயற்படுவீர்கள் என்று நம்புவது?
இதற்கு கூட்டமைப்பினர் மூகஇகுடைந்து நிலத்தில் விழச்செல்வார்கள். சாக்குப்போக்காகப்பதில் சொன்னாலும் இது உண்மையான வினாவே. தமிழர்களின் போராட்டத்தில், தாம் போராட்டம் இல்லாமலே தம்முடைய இனத்திற்கு விடிவினை ஏற்படுத்துகின்றவர்கள் முஸ்லீம் மக்ககே என்றும் பலதடவைகள் எழுதியுள்ளேன்.   

விரைவில் முஸலீம் மக்களிடம் கிழக்குமாகானம் பறிபோகும்… தமிழர்களின் போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு நிரந்தர தாய்நிலத்தை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தமிழர்கள் தந்தை செல்வா சொன்னதுபோல் யாராலும் காக்கமுடியாத இனம்… காரணம் தமிழர்களுக்குப்பிரச்சனை சிங்கள அதிகாரிகளோ அல்லது இலங்கைச்சட்டமோ அல்லது வெளிநாடுகளோ அல்ல … அவர்களுடைய சிக்கல் அவர்களே!!!

அரசில் அங்கம்வகித்தால் மட்டும் அரசியல்வாதிகளாகிவிடலாமா? புலிகள் ஆயதத்தால் போராடிய முறையினை தற்போது, கூட்டணியினர் அரசியலால் போராட முனைகின்றனரேயொழிய,  தமிழர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும், மற்றும் இலங்கை அரசிடம் இருந்து தமிழர்களுக்குக்கிடைக்க வேண்டிய உரிமைகளுக்குhகவும் இயங்கவில்லை என்பது திண்ணம். ஏதோ இப்போதுதான் புதிய இனமாக தமிழர்கள் தோன்றியது போலும், தமிழ்க்கட்சிகள் இப்போதுதான் ஆரம்பித்தவை போன்றும் செயற்படுகின்றன…

இன்னொரு முக்கிய விடயத்திற்காகவே இவ்வாக்கம் எழுதப்படுகின்றது. அதாவது, முன்பே எனது ஆக்கங்களில் எழுதிய விடயமேஇது… தமிழ் உலகத்தின் பலபாகங்களில் இருக்கின்றது… பல அரசினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது… சிலநாடுகளில் அரச மொழியாகவும் காணப்படுகின்றது… ஆனால் ஏன் தமிழர்களின் சார்பில் உலகரீதியிலும், நாடுகள்ரீதியிலும் பேசப்படும்போது, தமிழ் மொழி பேசப்படுவதில்லை? ஐ.நா. சபையில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?…  தமிழ் வெறும் பேச்சுமொழியாக இருக்கும்மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை… அது எப்போது ஒரு இனத்தின் மொழியாக அமைகின்றதோ அப்போது, அதற்குத் தனி இடம் கிடைத்தே ஆகும்.  நடிகர் கமலகாசன் சிறந்த நடிகராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார்விருது கிடைக்கவில்லை, இளையராஜ சிறந்த இசையமைப்பாளராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை… ஆனால் ரகுமான் அவர்களுக்கு விருது கிடைத்ததென்றால் அவர் வேற்றுமொழியில் தன்னைப்பிரபல்யப் படடுத்தியதே! எப்போது தமிழ் பிறநாட்டுமக்களிடத்திலும் புகுத்தப்படுகின்றதோ அப்போது, அது அதிகமாக கண்காணிக்கப்படுகின்ற இனமாகக்காணப்படும். திருக்குறள் தமிழில் கற்றோரிடத்தில் மட்டுமே தங்கிநிற்கின்றது, ஆனால் அது பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் அதன்மூலம் தமிழர்கள் வெளியில் வரவில்லை. காரணம் தமிழர்களுக்கு பிறநாட்டவர் கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையினையும் தமிழர்கள் கொடுப்பதில்லை. பிறநாட்டு மொழியில் இருப்பதனை தமிழில் மொழிபெயர்த்து பேர்வாங்க முன்வரும் அளவிற்கு, தமிழர்களின் படைப்பைப்பேசிப் பேர்வாங்க முன்வருவதில்லை…  தொடரும் (c)

Arugan TV

தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன் (D)

02bbn தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

ஏற்கனவே இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சரைத் தெரிவு செய்தபோது, அதன் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும் என்பதனையும், அதன்தெரிவிற்கான காரணத்தையும் மேலோட்டமாக விபரித்திருந்தமை, பல இணையங்களில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்…  -  தற்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வும் [ புதன்கிழமை, 05 மே 2010, 03:37.38 PM GMT +05:30 ] ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) என்று சொன்னதுமே, விடுதலைப்புலிகளின் சமாதானப் பேச்சுக்களே நினைவில் வரும். அத்தனைதூரம் புலிகளின் ஒவ்வெரு பேச்சுக்களிலும் அரசு சார்பில் தலைமைதாங்கியவராவார்.

இதில் புலிகளின் சார்பில் ஈடுபட்டோரில், (அமரர்) திரு அன்ரன் பாலசிங்கம் மற்றும் (அமரர்) சு.ப. தமிழ்ச்செல்வன் போன்றோர் தம்முடைய நிலையில் இனி வாய்பேச முடியாது என்பதனை நன்கு உணர்ந்த இலங்கை அரசானது, பேச்சுக்களில் ஈடுபட்ட இன்னும் இரு முக்கியஸ்தர்கள் என்ற வகையில் எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றமைக்கு, சர்வதேசத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருக்கின்றபோது,

உள்நாட்டில் மிஞ்சியுள்ள தற்போதைய பிரதி அமைச்சரும், சர்வதேசத்தின் பார்வைக்கு முன்னாள் புலிகளின் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவருமான கருணா என்கின்ற திரு.வி.முரளிதரன் அவர்களை ஒருவாறு தனது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொணர்ந்த போதிலும், புலத்தில் மிஞ்சியுள்ள ஒருவராகவும் சட்டத்தரணியாகவும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, புலத்தில் தனது நிலையினைக் காலூன்ற, மக்களின் பலத்தினை அரணாகக்கொண்டு இன்று நாடுகடந்த அரசை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு வி.உருத்திரகுமார் அவர்களை ஒரு வழிபண்ணவேண்டும் என்ற புதிய புலத்தின் அரசியல் போர் உத்திகளுக்காக இலங்கை, அரசால் தெரிவாகியிருக்கும் ஒரு புத்திஜீவியும் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான “ஜீ. எல். பீரிஸ்” என்ற இந்த மனிதரை நியமித்துள்ளது.

உள்நாட்டில், பலம்பொருந்தி ஆயுத அரசியலில் 2009 வரை கால்பதித்திருந்த புலிகளை, அடியோடு அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொண்டிருந்த போதிலும், “புலம்பெயர்ந்த புலிகளாக” “புலிகள் பெயர்ந்து தமிழர்களாக” உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி மண்ணோடு மண்ணாக்குவது என்ற முனைப்பு ஒருபுறமிருக்க… சர்வதேசத்தால் தனது முன்னைய புலிகளுடனான அனுபவத்தை வைத்து காய்களை பக்குவமாக நகர்த்துவதற்காகவே இவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றே இன்னொருபுறம் எண்ணத்தோன்றுகின்றது.

புலத்தின், மற்றும் புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் மனக்கசப்புகளும் இலங்கை அரசை மேலதிகமாக மூச்சுவிட வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. கடந்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருடத்தில், இலங்கை அரசானது பல சர்வதேச அரசியல், உள்நாட்டு ஜனநாயக நகர்வுகளை மேற்கொண்டிருந்த போதிலும், தமிழர்களின் சார்பில் கட்டப்பட்ட கட்டமைப்பை ஒரு முழுவடிவத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட தமிழர்களின் பின்னடைவு, இலங்கை அரசின் சர்வதேச அரசியலில் அவர்களை முன்னடைய வைத்துள்ளது.

(இதில் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது வேற்று நபர்களுக்கோ அமைப்புகளுக்கோ சார்பாகவோ, பாதகமாகவோ அன்றி,தமிழர்களுக்கான ஒரு பலமிக்க கட்டமைப்பு, மற்றும் ஒரு பலமிக்க, நம்பகத்தனமான தலைமைத்துவம் அவசியம் என்பதனை இத்தால் வலியுறுத்துகின்றேன். அந்தத்தலைமைத்துவம் இன்னாராகத்தான் (xxx) இருக்கவேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வது போலன்றி, யாராகவும் இருக்கலாம் என்பதே எனது ஆணித்தனமான கருத்தாகவும் உள்ளது…)

புலத்தில் இவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோர், இலங்கைத் தேசியத்தை ஏலவே மாற்றி பிறிதொரு தேசியத்தில் இருப்பதால், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் இலகுவில் எடுக்கமுடியாது போய்விட்டது. இருந்தபோதிலும் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்த முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் தேடப்படுவதென்பெது உண்மையே!

இப்போது இலங்கை அரசின் பார்வையானது, அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகடந்த கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதாவது உள் மற்றும் வெளிச்செயற்பாட்டில் இருந்தே, இலங்கை அரசின் இதற்கெதிரான சட்டப்போக்குகளில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த நாடுகடந்த கட்டமைப்பபானது, புலிகளின் போக்கினை வளர்த்தெடுப்பதாகவோ, அல்லது புலத்தில் இருந்து நிதிகளை வசூலிப்பதில் சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொண்டாலோ, இலங்கை அரசிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய நடவடிக்கையாக காணப்பட்டாலோ அன்றி இந்த நாடுகடந்த அரசை இலங்கை அரசு எதிர்க்கப்போவதில்லை.

அவ்வாறான செயற்பாட்டை உற்று நோக்கிய இந்த அமைச்சர் “பீரீஸை” பொறுப்பாக அமர்த்தியதற்கான காரணம் இப்போது மக்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் அணுவளவும் குறைவுபடாத பாலிதவை வைக்கவேண்டிய இடத்தில் ஏற்கனவே வைத்துள்ளமை சற்று அரசியல் வாதிகளை சிந்திக்கவைத்திருக்கும். அத்துடன் பான் கீ மூன் தொடர்பாக எதுவும் நான் செல்லவேண்டியது இல்லை, காரணம் அவர் யார், எந்த நாட்டையுடையவர், அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மத மற்றும் நிதி, ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்ள ஈடுபாடுகள் அப்பப்பா!!!…

இவ்வாறு இருக்க, ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்)  இலங்கையில் ஒரு பேராசிரியரும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதியும் ஆவார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்ததோடு, மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு கட்ட அரசவையிலும் பலமிக்க அதிகாரமுடைய அமைச்சினைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் அதிகாரிகள், மிகத்திறனுள்ள ஒரு அரசியல் சாணக்கியமுள்ள இலங்கை அரச தலைவரை எதிர்த்தே எமது போராட்டம் தொடங்கப்போகின்றது என்பதனை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக சொல்லப்போனால், முன்னைய பாராளுமன்ற அனுபவமுள்ள ஒருவரையும் இந்தக்கட்டமைப்பு உள்வாங்கியிருப்பதென்பது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக்கொண்டாலும், இன்னும் சில சந்தேகங்கள் எழாமல் இல்லை இந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப்பகுதியில் அவை இணைக்கப்படப்போவதில்லை.

அத்தோடு, இத்தனை காலமும் இருந்த வெளிநாட்டு அமைச்சர்களிலும் பார்க்க தற்போதுள்ள ஜீ.எல்.பீரிஸ் அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் துணுக்கு எழுதப்படுகின்றது. இதனை, அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் நடத்துனர்களும் அமைப்பாளர்களும் அறிந்து மிகப்பக்குவமாக காய்களை நகர்த்தும்படி அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மேலும் , கடந்த தேர்தல்களில் (புலத்தில்) இடம்பெற்ற ஜனநாயகப்போக்கு வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், சர்வதேச கணிப்பீட்டின்படி மக்கள் தொகையில் வாக்களித்தவர்களின் தொகையினை சர்வதேசக்கணிப்பாளர்கள் குறை கண்டுபிடிக்காதளவிற்கு அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

இலங்கை அரசின் மெளனத்தை அச்சமென்றோ, இயலாத்தன்மை என்றோ, அல்லது தமிழர்களின் போக்குச்சிறந்தது என்ற அடிப்படையிலோ, முட்டாள்தனமாக எனது எழுத்துக்கள் பாராட்டிய கருத்துக்களாக இருக்காது, எப்படி ஆரம்பத்தில் புலிகளின் நகர்வை அறியமுடியாது இலங்கை அரசு திண்டாடியதோ, அதுபோலவே இன்றுள்ள இலங்கை அரசின்போக்கு என்பதனை எச்சரிக்கையோடு, அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்துமாறு தமிழ்த்தலைவர்களை விழித்துக்கொள்ளச் சொல்கின்றேன்.

தற்போது மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கும் தமிழர்களுக்கு ஒரே ஒரு தொடர்புச்சாதனமாக அமைந்திருப்பது இணையங்களே.அந்த இணையங்களின் சாதுரியமான கருத்துக்களை வைத்தே தமிழர்கள் சர்வதேச சாணக்கியத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவும், இலங்கை அரசின் சாணக்கியத்தை முறியடிக்கவும் வேண்டும்.

உண்மையில் இலங்கை அரசு புலிகளை முடக்கிவிட்ட வீராப்பில் தூங்கிக் கொண்டாலும், அதை நாம் தூக்கமாகக் கருதக்கூடாது, அது தூங்குவதுபோல் நடிப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆமை வேகத்தில் நாம் சென்றாலும், முயல் வேகத்தில் செல்லும் இலங்கை அரசை தமிழர்கள் சார்பால் இந்த நாடுகடந்த அரசு வெல்லவேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு சார்பில் மேற்கொண்ட பத்திரிகை மாநாடுகளில் அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தாவது, புலிகளும் நாடுகடந்த அரசும் ஒன்றே என்ற பாணியை கொணர முயற்சிப்பதில் இருந்து அரசு வேறுவழியில் இந்த நாடுகடந்த அரசிற்கெதிரான தனது காய்களை நகர்த்திவருகின்றது என்பது வெளிச்சம். அத்துடன், அமைச்சர் பிரிசால் வழங்கப்படுகின்ற கட்டளைகளை இலங்கைத் தூதராலயங்கள் உலகின் பல பாகங்களிலும் திடமாக மேற்கொள்வதோடு, உலக அரசுகளும் தமது நகர்வுகளை இவருடைய அழுத்தத்திலிருந்தே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்நபர் மிகவும் முக்கிய காயாக தமிழர்களுக்கு விளங்கப் போகின்றார். இதனை எதிர்கொள்ள நாடுகடந்த அரசு அவையைப் பலப்படுத்துவதிலும், பெருமைகொள்வதிலும் பார்க்க இதற்கு “முறியடிப்பு” முகங்கொடுப்பதில் அக்கறை அதிகம் செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

தமிழர்களின் பலம்பொருந்திய சிறந்த,அழிக்க முடியாத சர்வதேச கட்டமைப்பை எதிர்பார்த்து… ) … (24/05/2010) புலத்தில் இயங்கிவரும் ஜீ.ரீ.வி.யைப்பார்த்தபோது அதில் இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியினை நடத்தினார்கள். அதில் குறிப்பிடப்பட வேண்டிய பலமுக்கிய விடயத்தை இரத்தினச்சுருக்கமாக முன்பே குறிப்பிட்டு விட்டபோதிலும் காலந்தாழ்த்தியே தமிழர்களின் அடிகள் எடுத்துவைக்கப்படுகின்றமை எமது பின்னடைவையே காட்டுகின்றது.

இலங்கை அரசின் ஒவ்வொரு அணு அணுவான அசைவுகளையும் தமிழர்கள் உன்னிப்பாகக்கவனிக்க வேண்டிய நிலையில் இன்று தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்  இணையங்களையும், தமிழ் ஊடகங்களையும் தொடர்ச்சியாகப்பார்த்தும் நம்பியும் வருகின்ற எமக்கு சர்வதேசத்திலும் ஊடறுத்துச் செல்லக்கூடிய பொறுப்புகளை உடைய சிங்கள அரசின் அணுகு முறைகளை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது?.

புலிகள் தேசியத்தின் ஏக பிரதிநிதிகள் என்று நாம் அவர்களிடம் பொறுப்புக்களை விட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தோம்!!! அது முற்றாக சிதைவடையும் மட்டும் எமது உறக்கம் கலையவில்லை!!! பின்னர் கூட்டமைப்பிடம் எமது நம்பிக்கையினை வைத்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றோம்… இப்போது நாடுகடந்த அரசு என்ற மாபெரும் சரித்திரத்தில் சர்வதேச அளவில் இருக்கின்ற போதில் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று மக்களோ (தமிழர்களோ) எல்லாவற்றையும் நாம் பார்த்துவிடுவோம் என்று (நாடுகடந்த அரசு ) அமைப்பாளர்களோ நினைத்துவிடக்கூடாது!!! இங்கேதான் எனது உறுதியான கருத்தைத்தெரிவிக்க முனைகின்றேன்… ஒவ்வொரு தமிழர்களும் தமது பங்களிப்பு வாக்குப்போடுவது என்றோ, நிதி உதவி வழங்குவது என்றோ நின்றுவிடக்கூடாது!!! அதையுந்தாண்டி பல விடயங்களை நாம் கால் வைக்கவேண்டும்.

நாடுகடந்த அரசை 18ம் திகதி அமைக்கவேண்டும் என்று உறுதி கொண்ட அமைப்பாளர்களுக்கு அதனை ஆணித்தனமாக நடாத்துவதற்கு அடியில் இருந்து நுனிவரை இழுபாடாகத்தான் இருக்கின்றது. அந்த இழுபாட்டில் பிஞ்சுபோவது தமிழர்களேயன்றி வேறுயாருமல்ல! 17,18ம் திகதி நடத்தியாகவேண்டும் என்ற வைராக்கியம் முக்கியமா? தமிழர்களுக்கு நிரந்தர விடிவு அவசியமா? … இதில் அமைப்பாளர்களுக்கு 18ம் திகதி பிடிவாதமே அவசியப்பட்டது. அதனால்தான் சில நாடுகளில் தேர்தல் நடைபெறாமலே அவையைக்கூட்டிவிட்டார்கள்… ம்… ம்… சரி மீண்டும் தூங்கச்செல்வோம்…

முதலில் நாடுகடந்த அரசின் தற்போதைய பின்னடைவுகளுக்கு, அவர்களுடைய முயற்சி ஒரு காரணமல்ல, சாதாரண அமைப்பை நடத்துவதற்கே அதிகமான நிதிகளும், ஆர்வமான செயற்பாடுகளும் தேவைப்படும் போது, ஒரு நாட்டையே ஆட்சி செய்வதற்கு வெறும் வாக்குகளை மட்டும் போட்டால் போதுமா? நிதிகளுக்கும் ஆதரவிற்கும் எங்கு போவது??? இதற்கு நிதியை சட்டபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன அதில் எந்த வழிகளிலும் இலங்கை அரசு எதிர் நடவடிக்கைகளை எடுக்காத வகையில் மேற்கொள்ள வழிகள் இருக்கின்றன. இதற்கு மக்கள் ஒவ்வொரு தனி மனிதர்களாகவும் போராட்டத்தில் குதிக்க வேண்டும் (கவனம் தமிழர்களே!!!).

இந்த வகையில் நாடுகடந்த அமைப்பாளர்களின் அடுத்த கட்டநடவடிக்கை நிதி சேகரிப்பாகவே அமையப்போகின்றது. அது வரைக்கும் அவர்கள் எந்த அறிக்கையோ அல்லது எந்த நடவடிக்கையோ எடுக்கப்போவதில்லை!!! இலங்கை அரசிற்கு வரி வசூலிப்பதற்கு உரிமை இருக்கின்றது… ஆனால் இந்த நாடுகடந்த அரசிற்கு…????

இலங்கை அரசு போர்க்குற்றத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று இப்போது ஆதாரத்தோடு நிரூபித்தாலும் அதன் போக்கு பற்றி இந்த போர் இடம்பெற்ற போதே ஆணித்தனமாக விபரித்திருந்தேன் என்பதனை எனது இணையத்தின் வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே, இன்று இலங்கை அரசு எடுதஇதுவைக்கும் ஒவ்வொரு அடிகளிற்கும் பத்தடி வேகமாக ஒவ்வொரு தமிழர்களும் காய்களை நகர்த்தவேண்டும்.
கடந்த காலத்தில் எமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததில் இருந்து எமது போக்கானது இலங்கை அரசை கூண்டில் ஏத்தவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கின்றோமே ஒழிய தலைவரின் எண்ணத்திலிருந்து பின்நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதனை மறந்து விட்டோம். சிங்களவர்களை அழிப்பதோ, அல்லது இலங்கை அரசை இல்லாது ஒழிப்பதோ தலைவருக்கு ஒரு பெரும் காரியம் இல்லை என்பதனை கடந்த காலத்தில் பலத்த பாதுகாப்பிலும் தலைநகரில் விமானத்தாக்குதலை நடாத்திக்காட்டியதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதாபிமானம், சர்வதேசம், போர்நீதி போன்ற பல்வேறு காரியத்தோடும், இலங்கை அரசிடம் இருந்து நீதியான உரிமைகள் வேண்டுவதற்காகவும் பொறுமையினை கடைப்பிடித்தாரே ஒழிய எந்த சிங்கள இனத்தவரையும் வெறுத்ததோ அல்லது எதிரியாக நினைத்ததோ இல்லை! சிங்கள இன வெறியர்களின் போக்கையே கண்டித்து இப்போர் பலமாக நடைபெற்றது என்றால் அது மிகையல்ல!

இன்று தமிழர்களின் ஒவ்வொரு அடிகளின் படிகளிலேயே தமிழீழம் கட்டப்படுகின்ற அத்திவாரம் உண்டென்பதனை அடுத்து வரும் பகுதிகள் மேலும் தெளிவு படுத்தம்.

இதில் ஒரு சாணக்கியத்தைச் சொல்லியே ஆக வேண்டும்… புலிகளை அழித்தது போல் நாடுகடந்த அரசை அழிப்பதற்கு இலங்கை அரசு வண்முறையினைக் கையாளப்போவதில்லை! அதனை சர்வதேசத்தை வைத்தே அழுத்தங்கொடுக்கப்போகின்றது என்பதே அசைக்க முடியாத எனது எண்ணம்… – அருகன்.