Archivio delle Categorie: திருக்குறள்

திருக்குறள் பக்கம் – Thirukkural Page

 

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்

அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்



சொல்
முதல் கடைசி எங்கு வேண்டுமெனினும் குறள் எண்

அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை

அறன்வலியுறுத்தல்
இல்வாழ்க்கை
வாழ்க்கைத் துணைநலம்

புதல்வரைப் பெறுதல்
அன்புடைமை
விருந்தோம்பல்

இனியவைகூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவு நிலைமை

அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பிறனில் விழையாமை

பொறையுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை

புறங்கூறாமை
பயனில சொல்லாமை
தீவினையச்சம்

ஒப்புரவறிதல்
ஈகை
புகழ்

அருளுடைமை
புலான்மறுத்தல்
தவம்

கூடாவொழுக்கம்
கள்ளாமை
வாய்மை

வெகுளாமை
இன்னாசெய்யாமை
கொல்லாமை

நிலையாமை
துறவு
மெய்யுணர்தல்

அவாவறுத்தல்
ஊழ்

பின்பு
Click for English Translation
துரித இணைப்புகள்

அறத்துப்பால்

பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்

பொருட்பால்

அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்

படையில்
நட்பியல்
குடியியல்

காமத்துப்பால்

களவியல்
கற்பியல்

இணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த் NANRI

முத்து இணையம்

திருக்குறள் பக்கம் – Thirukkural Page

திருக்குறள்,கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

  • அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றான் தொழாஅர் எனின்.

  • தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

  • மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

  • விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

  • இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

  • மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

  • ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

  • அந்தணர் என்பதற்குப் பொருள் ‘சான்றோர்’ என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

  • உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

  • வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.