Archivio delle Categorie: தேசியம்

இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு…

Patente Italianoஇத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01) -2

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

Inserisci qui la didascalia video

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

வரலாறு தொடர்பாக ஆதாரங்காட்டி எழுதும் எழுத்தாளர்கள், மற்றும் விமர்சகர்களுக்கு ஈழத்து வரலாறே படிப்பினையாகவும், நடைமுறை ஆதாரமுமாக இருக்கும் போது அந்நிய வரலாற்றில் பாடங்கற்பிப்பது தேவையற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.

இன்றைய நடைமுறையிலேயே பல உண்மைகள் வெளிப்படாமல் இருக்கும் போது, பலவருடங்கள் கடந்த அதிலும் அந்நிய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் மட்டும் எப்படி உண்மையானது என்று ஆதாரங்காட்ட முடியும் என்ற கேள்வி எழவில்லையா?… சந்திரிக்கா அம்மையார் உயிருடன்தான் இருக்கின்றார், மகிந்தவும் உயிருடன்தான் இருக்கின்றார், புலிகளின் பல தலைவர்களும் புலிகள் அமைப்பின் பல முப்கியஸ்தர்களும் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றார்கள்… அப்படி இருக்கும் போது இறுதிக்கட்டப் போரில் நடந்த பல சம்பவங்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்ற போது, அவ்வாறான சம்பவங்களை துருவி ஆராய்ந்து சரித்திரத்தில் உண்மையினைப்பதிக்க முடியாத ஆராட்சியாளர்கள் பல வருடங்கள் கடந்த பின்னர் ஆதாரங்கள் என்று சொல்லும் அல்லது சொல்லப்போகும் முடிவுகளை உண்மை என்று உறுதிப்படுத்துபவர்கள்யார்???

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சிங்கள அரசு தூக்கி வைக்கப்போவதில்லை, அதுபோல மகிந்தவின் சிறப்புக்களை எப்போதும் புலிகள் இயக்க இயங்கும் உறுப்பினர்கள் மேன்மைப்படுத்தப்போவதில்லை… இப்படி இருக்கும் போது எப்படி உண்மை நிலைக்கும்!!???

கனடாவில் தமிழர்களுக்கிடையில் பிளவு, சுவிஸ் தேசத்தில் அதே போன்று பல பிளவுகள், நாடுகடந்த அரசு என்ற அமைப்பிற்குள் இன்னும் சிக்கல்கள்-பிளவுகள், முன்னாள் புலிகள் அமைப்பினருக்குள் பிளவுகள், தன்னிச்சையாக தமிழர்களுக்கு ஆயிரம் நன்மைகளைச் செய்வோரை ஏற்றுக்கொள்ள மற்றைய அமைப்புக்களும், சாராத தமிழ் ஊடகங்களும் மறுப்பும் மறைப்பும்,
… … இப்படி இருக்கும் போது யார் யாரை வரலாற்றில் பதியப்போகின்றார்கள். அது எப்படி வரலாற்றில் பதியப்படப்போகின்றது.

ஒரு இணையத்தில் தவறுதலாக வெளியிட்ட சம்பவத்தையோ அல்லது செய்தியையோ, திருத்துவதற்கும், தவற்றை ஏற்று மாற்று கருத்தை விடுவதற்கும் இன்றுள்ள எந்த ஊடகம் முன்நிற்கின்றது?

தமிழர்கள் நாம் போராட்டங்களை மேற்கொள்கின்றோம், ஆனால் யாரும் நேரடியாக தலைகொடுக்க மறுக்கின்றார்கள்! சுpங்கள அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வலும் தமிழர்களை பார்த்தால் அவர்கள் வேறு தேசியத்தை உடையவர்களாகக்காணப்படுகின்றார்கள்… மின்னஞ்சல்கள் மற்றும் இணைய நடத்துனர்கள் யாரும் தமது சொந்த பெயரை இட்டதாகக்காணவில்லை. தும்மைப்பற்றி மற்றைய தமிழர்களுக்கு மறைவாக வெளிப்படுத்தவே முயல்கின்றார்கள், அதற்கு பாதுகாப்புக்காரணம் என்ற ஒன்றைக் கூறினால், யாரிடம் இருந்து பாதுகாப்பு என்ற கேள்வி எழுகின்றதல்லவா? … அவ்வாறு இருப்பின் நீதியான கோரிக்கைகளுக்காகப்போராடும் போது ஏன் மறைவாக இருக்க வேண்டும் என்ற இன்னொரு கேள்வியும் வெளிப்படுகின்றதல்லவா? ஒரு தனி அரசை நடாத்திய புலிகள்கூட சர்வதேசத்தில் அதிலும் நோர்வேக்குச் செல்லவோ அல்லது வேறு தேசத்திற்குச்செல்லவோ “தமிழீழத் தேசிய கடவுச்சீட்டை” பாவிக்கவில்லை என்பது பெரும் வேதனையினைத்தருகின்றது!!!.

உலகத்தில் அன்றைய நடைமுறை அரசிற்கு எதிராகச்செயற்பட்ட பல தலைவர்களின் வலறாற்றுப் பதிவு என்று சொல்லப்படுகின்ற ஆதாரங்களைப்பார்க்கும் போது, அத்தகவல்களை மறைத்து வைப்பதற்கே விரும்புகின்றனர். அது அத்தலைவர்களைப் பின்பற்றும் மற்றையவர்களுக்கு ஒரு துணிச்சலையும் அவர்களைச் சான்று வெளிப்படுகின்றவர்களுக்கு ஒரு திடத்தையும் கொடுக்கும் என்ற உளவியல் போக்கே காரணம்.  ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எப்படி வரலாற்றை எதிர்காலத்திற்கு உண்மையாக வழங்கமுடியும்?

கடந்த 2003ம் ஆண்டு எனது நூல் வெளியீட்டின்போது அந்நூலிற்கான விமர்சனத்தை மேற்கொண்ட ஒரு நபர் தனது பேச்சில் “ புலிகளின் தலைவரைப்பற்றி மிகச்சிறப்பாகவும், உயர்வாகவும்” பேசித்தள்ளினார். ஆனால் அந்த பேச்சின் காட்சிகளை 2009க்கு பிற்பட்ட காலத்தில் இணையத்தில் இருந்து அகற்றிவிடும்படி வலியுறுத்தினார்… இதில் இருந்து அத்தலைவனுக்காக அவர் ஏற்கனவே பேசிய வார்த்தைகளிற்கு எத்தனை தூரம் முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்றும் அத்தலைவன்மீது வைத்த விசுவாசம் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்ற சந்தேகம் எழத்தோன்றவில்லையா?

ஏற்கனவே “மலரும் மா தமிழீழம்” என்ற எனது 2007ம் ஆண்டு நாவலில் குறிப்பிட்டது போல் “இவர்களை நம்பியா எமது தமிழீழத்தை இவர்களிடம் ஒப்படைப்பது?” என்ற கேள்வி இப்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதே நூலில் எழுதப்பட்ட இன்னொரு விடயம் நாளை தமிழீழம் மலரும் போது தமிழீழ தூதராலயத்தில் அவ்வாறானவர்களையா அமர்த்தப்போகின்றோம் என்ற கேள்விகளும் எழுகின்றதல்லவா?

தூதராலயம் என்றதும் இடையறுத்த கேள்வி ஒன்று எழுகின்றது! அதுவாகில் நா.க.அ. என்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை ஆரம்பித்துள்ள எமது புத்திஜீவிகள் அதற்கான காரியாலயங்களை ஆரம்பிக்கும் முன்னர் தூதராலயத்தை ஆரம்பித்துள்ளமை சிரிப்பாக உள்ளது! இது அவர்களை கேவலப்படுத்தவல்ல, மாறாக எடுக்கும் காரியங்களில் ஆணித்தனமான அத்துpவாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே! குனடாலில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், பிரித்தானியாவில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், சுவிசில் பெரும் தமிழ் விசுவாசிகள் இருக்கின்றார்கள்… இப்படி இருக்கும் போது அங்கெல்லாம் அலுவலகங்களை அமைக்காமல், அல்லது தூதராலயங்களை அமைக்காமல் எங்கோ கொண்டு தூதராலயத்தை அமைத்தமை திடமற்ற செயலைக்காட்டுகின்றது. மேலும் அத்தூதராலயங்களில் யார் எதை நோக்கி அணுகப் போகின்றார்கள் என்ற கேள்விகளும் உள…
நான் சில அமைப்புக்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றேன். ஆவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதற்கான செயற்பாடுகள் இருக்கின்றன. ஏவ்வாறான செயற்பாடுகளை அவ்வமைப்பு மேற்கொள்கின்றன என்ற வெளிப்படையான ஒரு அறிக்கையே காணப்படுகின்றது. இது இப்படி இருக்க நான் ஒரு தமிழீழப்பிரஜையாக நா.க.அ. அணுகவேண்டி பல தொடர்புகளை மேற்கொண்டு பார்த்தேன். ஆவை ஒன்றுக்குக்கூட பதில் வந்ததாக இல்லை! மேலும் காலத்திற்குக்காலம் ஒரு இணையம், காலத்திற்குக்காலம் ஒரு மின்னஞ்சல்… இது தனது குடிமக்களையே அந்த அரசு அவமதிப்பதாகத்தோன்றாதா?

திரு உருத்திர குமார் அவர்களுக்க ஒரு ஆலோசனை வழங்க முனைகின்றேன். தங்கள் பேச்சில் வசனங்களில் “நான்” என்ன உச்சரிப்பின் ஆரம்பங்களும் நாங்கள் என்ற வசனத்தின் முடிவுகளுமே அதிகமாகக்காணப்படுகின்றது. அவற்றை இனிவரும் தங்கள் பேச்சுக்களின் சீர் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். ஊங்கள் செயற்பாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும் தங்கள் வழங்குகின்ற பேச்சுக்களால் தங்கள் தரம் தமிழில் குறைவென்ற ஐயப்பாடு புலத்தில் வாழ்கின்ற இழையோர் மத்தியில் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே எடுத்க்காட்ட நேர்ந்தது. ஆத்துடன் பல தமிழர்கள் ஊடகங்களில் பேசும் போது சம்மந்தமற்ற இடத்திலெல்லாம் “அதாவது” என்ற பதத்தைப்பயன்னடுத்தும் போது மிகவும் கேவலமாக இருக்கின்றது. தமிழுக்காகப்போராடுகின்றோம் தமிழை பேசுவதில் கோட்டை விடுகின்றோம். அதற்றாக இலக்கணத்தில் அல்லது இலக்கியத்தில் பேசச்சொல்லவில்லை ஆங்கில உச்சரிப்பில் பேசினால் கூட அல்லது ஆங்கிலத்தையோ வேற்று மொழியையோ இணைத்துப் பேசினால் கூட பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைப்பயன்படுத்த கேட்கின்றேன். காரணம் இன்றுள்ள நிலையில் தமிழர்கள் அல்லாத பலர் தமிழை முறையோடு பேசக்கற்றுக்கொண்டிருக்கும் போது தமிழர்கள் தமிழை தவறாகப்பேசிக்கொள்வது முறையாகவா காணப்படும். என்னிடம் பல இத்தாலியர்கள் தமிழ் கற்றுக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கற்கும் போது தமிழர்களிலும் பார்க்க அதிக விரைவாக கற்றுக்கொண்டார்கள் என்றால் நாளை அவர்களிடம் நாம் கற்கவேண்டிய அவல நிலை வந்து விடக்கூடாதல்லவா? உதாரணம் ஏற்கனவே வீரமா முனிவர் மூலம் வரலாறு விட்டுச்சென்ற சம்பவங்கள் உள.  

– தொடரும்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன – ஆசிரியர் குழுமம்

 

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. அது மட்டுமல்லாது, எவ்வகையான கருத்துக்கும் எமது தளம் கைகொடுக்கும் மேலும் உங்கள் ஆக்கங்கள் கூட எமது தளத்தை அலங்கரிக்கக்காத்திருக்கின்றோம். ஒருங்கிணைந்த தமிழ் மணங்கமழ உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள். – ஆசிரியர் குழுமம். மேலும் வாசிக்க »

தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து,

கடந்த பத்துவருடங்களாக, தமிழர்களுக்கு மட்டுமன்றி பல்வேறுபட்ட மக்களுக்கும் உதவும் வகையில் ஐரோப்பா ரீதியில் செயற்பட்டுவந்த தமிழ் ஒன்றியமான “புதிய தலைமுறை ஒன்றியம்” தற்போது தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து, செயற்படுத்துவதோடு, அதன்மூலம் உலகத்தமிழர்களுக்கு ஆதரவாகச்செயற்படும் அனைத்து அமைப்புக்களுக்கும் அனைத்து உலக ரீதியிலான அரச நிறுவனங்களுக்கும் ஒத்தாசையும் முழு ஆதரவும் வழங்கும் நோக்குடனும் மனித வளமேம்பாட்டை  உயர்த்திக்கொள்ளும் நோக்குடன் செயற்பட எத்தணிக்கின்றது.
கடந்த காலங்களில்

  • கலைநிகழ்ச்சிகள் -
  • கருத்தரங்குகள்
  • நாவல்களின் வெளியீடுகள்
  • கலைஞர்களை உருவாக்குதல்
  • தூதராலயங்களுடனான தொடர்புகளும் அதில் உள்ள சிக்கல்களைத்தீர்த்தலும்.
  • வறிய மக்களுக்கான நிவாரணங்கள்
  • மக்கள் நலன்கருதி வீழிப்புணர்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்
  • உளவியல் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள்
  • தொழில் வழங்கல்
  • சட்டஆலோசனைகள்
  • கல்வி, கலை, கலாசார செயற்பாடுகள்
  • நூலகச்செயற்பாடுகள்
  • கணனிதொடர்பான சேவைகள்

                என ஏராளமான எண்ணிலடங்கா விடயங்களை மேற்கொண்டுள்ளதென்பது எமது சிறப்பு. பின்வரும் ஆதாரங்கள் அதற்குச்சான்றுகள்.

பட இணைப்புக்கள்.

IMG_0008 IMG_0026 IMG_0041 IMG_0048 IMG_0012 IMG_0019 IMG_0063

மேலும் இந்த தேசியத்தின் அமைப்பாளர்களை நிர்ணயிப்பதற்காக இருநாட்களின் பின்னர் மாபெரும் கருத்தரங்குகளும், கலந்துரையாடலும், பயிற்சிகளும் இடம்பெற்றபின்னர் முடிவிற்கு வந்தது. மேலும் எதிர்காலத் திட்டம் தொடர்பாகவும், விஸ்தரிப்புக்கள் தொடர்பாகவும் பாரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்முடிவில் வருகின்வ வருட ஆரம்பத்தில் இருந்து இவ்வலுவலகம் சட்டப+ர்வமாச்செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.