![]()
சில தமிழர்களுக்கும், சில ஊடகங்களுக்கும் பொறுமையே இல்லை என்பதனை கடந்த காலங்கள் நிரூபித்தே வருகின்றன… அதுவாகில் சங்கிலியன் தொடர்பாக எத்தனை போடுபோட்டார்கள்!!! கடைசியில் நடந்துள்ள முக்கிய தவறை திருத்த முன்னர மறுக்கின்றார்கள். அதுவாகில் சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி அதனைத் திருத்த யாரும் “தலைவர்கள், தேசியவாதிகள், தமிழ்பற்றாளர்கள்… முன்வராதது ஆச்சரியத்தைத்தருகின்றது.
எதையுமே முழுமையாக முடிக்கும்
பழக்கம் எமது உறவுகளிடம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதில் ஒரு வேடிக்கையும் இருக்கத்தான் செய்கின்றது… அந்த சிலை திரை நீக்கம் செய்த போது கூட்டமைப்புச் செல்லவில்லையாம். காரணம் டக்ளஸ் திறந்துவைப்பதாலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. “தமிழீழத்தை” “சிங்களவனிடம்” இருந்தே பெறப்போகின்றோம்… அதில் தன்மானம் தெரியவில்லையாம், தமிழன் ஒருவன் திறந்து வைத்தால் செல்லமாட்டார்களாம்… அந்த தமிழனை மட்டுமல்ல எந்தத்தமிழனையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே என்றும் தமிழர்களின் உண்மை நிலை.