Archivio delle Categorie: விமர்சனம்

சத்தியவேள்விக்கு சவால்விடும் “தமிழ்த்தேசியம்”

!cid_image003_jpg@01CBEE3C அண்மையில் தமிழ்த்தேசிய ஊடகங்கள் என தமிழ் மக்களால் கருதப்பட்ட ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த அல்லது

…வெளிவரப்போகும் தகவல்கள் பற்றிய உண்மைத்தன்மையையும் அதன்பின்னணிச் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தையும் முன்வைப்பது அவசியமானது என்றும் அவசரமானது என்றும் கருதுகின்றோம்.

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01) -2

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

Leggi l’articolo completo

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும்,…தொடர் பக்கங்கள்….பாகம்3 அருகன்.

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும்,…தொடர் பக்கங்கள்….பாகம்3 அருகன்.

http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!4219.entry – 01

http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!4427.entry – 02

 சிங்கள வரலாறு ஏற்கனவே இரு பாகங்களை வாசித்த பலர் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பிலும், இதன் போக்கு எத்தகைய உண்மை பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும், வழமைபோல் இவருடைய ஆக்கத்தில் வெளிவருகின்ற முற்போக்கு கருத்துக்கள் இதில் வெளிவருமா என்று சில அரசியல் நகர்வாளர்களும், விவாதத்திற்கே என்று இன்னொரு  சிலரும் …, சஞ்சரிக்கத்தான் போகின்றனர்… இது ஒருபுறம் இருக்க, பேரறிஞர் ஐயா சிவத்தம்பியைப்பற்றி ஒரு சம்பவத்தை பதித்தாகவே ண்டும் … காரணம் “கடந்த வரலாற்று உண்மைகளை,  இன்றைய அநர்த்தத்தோடு ஒப்பிடும்போதே, எதிர்கால பாதைகளிற்கான கடினமான கற்கள் விலக்கப்படுகின்றன…”  இதனடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டில் ஐயா மதிப்பிற்குரிய சிவத்தம்பி அவர்கள் “தமிழ்நாடு கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழுத்தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும்இ தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் அண்மையில் பி.பி.ஸி. தமிழோசைக்கு தெரிவித்தார்.” என பல இணையங்கள் காரசாரமாக வெளியிட்டிருந்தன… இதற்கும் இலங்கை வரலாற்றிற்கும் என்ன சம்மந்தம் என்று ஒரு சிலர் வினாவத்தான் செய்வார்கள்!!!… “எப்போதும் பலம்பொருந்தியவர்களின் செயற்பாடுகள் சர்வதேச சிறப்பைப்பெறும், மாறாக பலங்குன்றியவர்கள் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் அது விமர்சனத்தோடே ஸ்தம்பித்துவிடுகின்றன…” என எழுகின்ற கருத்தின் அடிப்படையில் பேரறிஞரான ஐயாஅவர்கள் திடமாக வார்த்தைகளையும் அடிகளையும் எடுத்துவைக்காது, பலவீனமான கருத்தைத்தெரிவித்து விட்டு இப்போது 2010ல் அந்த விழாவில் கலந்து சிறப்பித்து வந்திருக்கின்றார்… நல்ல செயற்பாடு, இதையே அவர் ஆரம்பத்தில் திடமாகச்சொல்லியிருந்தால் அனைத்து தமிழ் ஊடகங்களும் தமிழ் அறிஞர்களும் அதுதொடர்பாக பேசியிருப்பார்கள், அந்த மாநாட்டில் பல தமிழர்கள் கலந்தும் இருப்பார்கள்…  தமிழ் உலகம் முழுதும் சிறப்பிக்கப்பட்டிருக்கும்… இவ்வாறான செயற்பாடுகளே வரலாற்றை மழுங்கடித்து முன்னுக்குப்பின்னான முரன்பாடுகளை எதிர்காலச்சந்ததிக்குத்து தோற்றுவிக்கின்றது. முன்னிக்கவேண்டும் ஐயா அவர்களே! தவறுகள் பகிரங்கமாக்கப்பட வேண்டும் அப்போதுதான் அவை திருத்தப்படும்!!!
இனி… அடுத்து பகுதிக்குச் செல்வோம்.        Leggi l’articolo completo

UNGA ஒன்றியத்தின் அனைத்துப்போக்கும் தமிழர்களின் தார்மீக உரிமையினை நோக்கியே சொல்கின்றன…

New UNGA copyகடந்த காலங்களில் இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்து உச்சகட்டமாக இடம்பெற்றபோது, புலத்தில் தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரால் பல போராட்ட வழிகள் பின்பற்றப்பட்டன. அப்போது எமது ஒன்றியத்தின் சார்பில் எமது ஒன்றிய எழுத்தாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது மக்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15-02-2009ற்கு முன்னர் இது அனுப்பிவைக்கப்பட்டதும் அருகன் தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது. Leggi l’articolo completo

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் – Malarum Ma Thamileelam…

2006ம் ஆண்டு அருகனால் எழுதப்பட்ட விடயத்தை மெருகூட்டப் பார்க்கின்றனர் புலத்தில் பேரவையாளர்கள்- ஆனால் அது தம்முடைய உதயமாக எடுத்தியம்புகின்றனர். அதன் ஆக்கம் கீழே தரப்படுகின்றது.       

 ”மலரும் மா தமிழீழம்”                     என 2008ல் இது நூலாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

“அடிதடி 14”

http://it.calameo.com/read/0000948120aaf09622d82

புலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போகி
றது.

 எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று எண்ணி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்… தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது.

மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர்…, ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன்.

அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம்,நிறையவே இருக்கிறது… ஆழமாகவே கிடக்கிறது. அதாவது, இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ, அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். Leggi l’articolo completo

முன்னைய தவறினை இலங்கை அரசு இம்முறை மேற்கொள்ளக்கூடாது என்பதில் திடம்…

Sri Lanka 2009ஆரம்பத்தில், வடக்கில் தமிழர்கள் பெரும்பாலும் வாழ்ந்தாலும் குறுகிய அழவில் முஸ்லீம் மக்களும், ஒருசில சிங்களவர்களும் இருந்ததன் காரணத்தால்தான் புலிகளின் வழர்ச்சி அதிகமாக்கப்பட்டிருந்தது. எனவே, இம்முறை இலங்கையின் அனைத்து பகுதியிலும், சிங்களக்குடியேற்றத்தை மேற்கொள்ளவும், அனைத்து விழாக்களிலும் பௌத்த குருமாரை முன்நிலையில் நிறுத்தவும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு தமிழ் அரசியல்வாதிகள் கையாளாகாத்தன்மையில் இருப்பதும் வெளிச்சம்.

இதற்கு தமிழ் அரசியல் அமைப்பாளர்கள் என்ன செய்யவேண்டும்???? எல்ல அமைப்புக்களும் தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற பல்லவியினைப் பாடுகின்றார்கள். ஏன்னைக்கேட்டால் தமிழர்கள் அரசியல் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி “ இலங்கை அரசின் குடையின் கீழ் அனைத்துப்பகுதிகளிலும் தமிழ்க் கட்சிகள் தேர்தலில் நிற்கவேண்டும். வெற்றியோ தோல்வியோ அவர்களின் செயற்பாடு இடம்பெறவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளுக்கு எப்படி தமிழர்கள் வாக்குகளை வழங்குகின்றார்களோ அவ்வாறே, தமிழர்களுக்கும் சிங்களவர்கள் வாக்குப்போடுகின்ற நிலை வரவேண்டும்” அப்போதுதான் இலங்கை ஒருகுடையின்கீழ் செயற்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளமுடியும். சிங்களவர்கள் தமிழ்ப்பிரதேசங்களில் வாக்குரிமையினைக்கேட்கலாம். ஏன்தமிழர்கள் சிங்களவர்கள் வாழும் பிரதேசஙங்களில் வாக்கினைக்கேட்கமுடியாது? Leggi l’articolo completo

தமிழனின் தலைவிதி அவன் காலில் இருந்து மிதிபடுகின்றது… –

animoney1கையில் தேசத்தைக் கொடுத்தாலும், அதை காலில் பந்து போல் விளையாடிக் கொண்டிருக்கின்றான் தமிழன். பல வருடங்களாக உரிமை வேண்டி போராடினான், இப்போது உரிமைகளை பிரித்துக் கொடுத்திருக்கிறது இலங்கை அரசு. அதை பயன்படுத்தி மேலும் முன்னேறும் வழியை விடுத்து, “வக்கோல் பட்டறை நாய்” போன்று தன்னைத்தானே கேவலப்படுத்துகின்றான்.

Leggi l’articolo completo