Archivio delle Categorie: Computer e Internet

மக்ஸிமோந்தோ MaxiMondo

மக்ஸிமோந்தோ MaxiMondo

இது எழுத்தாளர்  அருகனால் Arugan (திரு பி.மக்ஸிமின் – Mr. F.Maximin ) இத்தாலியில் றெஜியோ மாவட்டத்தில் உள்ள (CGIL) தொழிற்சங்க அலுவலகத்திற்காக, அதன்செயற்பாடுகளை இலகுபடுத்தவும் துரிதப்படுத்தவும் பதிவு செய்யவும் எனப்பல்வேறு விடயங்களுக்காக உருவாக்கப்பட்டது. தற்போது இது றெஸியோ மாவட்டத்தில்  (Reggio Nell’Emilia) உள்ள குடிவரவு குடியகல்வு போன்ற செயல்களை செய்வதற்கான அலுவலகத்தில் ( Reggio Emilia, Castelnovo monti, Scandiano, Ciano denza, Correggio, Guastalla, Novellara, Sant’ilario,…)  அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதன்உருவாக்கம் 2006 முதல் வெளியீடாக வந்தது பின்னர் மேலும் பல விடயங்களுடன் 2007ல் 2வது வெளியீடாக வெளியிடப்பட்டது.
 
இவரை அலுவலகத்தில் மாக்ஸ் என்று அழைப்பதன்காரணத்தால் இப் புரொக்கிராமிற்கு அவருடைய பெயரை இணைத்தும் பல தகவலை உள்ளடக்கியதால் மோந்தோ(உலகம்) என்பதனை இணைத்தும் மக்ஸிமோந்தோ என்று பரிந்துரை செய்யப்பட்டது.
தற்போது 3வது வெளியீடாக மேலும் பல புதிய பொதுத்தகவலுடனும், மெருகூட்டப்பட்டு வெளிவரவுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டவர்கள் தொடர்பான தொழிலினை மேற்கொள்வோர்கள் இலகுவாகவும் உறுதியானதுமான அலுவலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.