சிறுகதை
ஏமாருவோர் இருக்கும் வரையில்…
அப்பாடா என்ற பெருமூச்சுடன்கண்களைத்திறந்தான் கபிலன். யாரிவன் இரவு பகலாக திழிழர்களின்விடுதலைக்காக புலம்பெயர் தேசத்தில்போராடியவன். துடுக்கும் திடகாத்திரமுமான சுபாவமுடையவன்.
கபிலனின் பெருமூச்சைக்கண்ட ஐயர், “என்ன தம்பி பெருமூச்சுப்பலமாக இருக்கிறது” என்றார்.
இல்லையய்யா எல்லாம்கனவு போல்இருக்கிறது என்று இழுத்தான்
எதப்பத்தி செல்லுறாய்… என்றார் ஐயர்
எல்லாம் தேசத்தப்பத்தியதுதான்
விழுந்து விழுந்து போராடினோம் ஆனால்?
இதுதான் நான்ஒன்றும் செல்லுறதில்ல… எங்கட அனுபவமும் இல்ல உங்கட வயசு என்று இழுத்தார்
இப்ப சொல்லுங்கையா கேக்கிறேன்… மண்டையில உறைக்கச் சொல்லுங்க…
உன்னட்ட நான் ஒன்றுமட்டும் கேட்ட ஆசப்படுறன்…
என்னையா?
சனம்செத்துப்போய்சு எண்டு கணக்குக்காட்டுறீயளே புலிகள் செத்துப்போகலயா, அதைஏன்கணக்குக்காட்டுறீயள் இல்லா? என்றார்
இந்தக்கேள்வியைத் திடீரென்று கேட்டதால் கபிலன் திகைத்தானாகிலும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல், “அது சரியான தகவல் முழமையாக இன்னும்வரவில்லை” என்றான்
இந்தக்கேள்வியைத் திடீரென்று கேட்டதால் கபிலன் திகைத்தானாகிலும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல், “அது சரியான தகவல் முழமையாக இன்னும்வரவில்லை” என்றான்
இதுதான் சமயம் என்று அடுத்த அடியை எடுத்தார் ஐயர் “ அப்படிஎன்றால் எப்படி மக்கள் செத்தத மட்டும்அக்குவேறு ஆணிவேறாகச் செல்லுறீயள்” விட்ட பெருமூச்சு திரும்பவும் கபிலனுக்குள் புகந்தது…
தொடரும்…