தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்படவிடுவதில்லை!!!

தமிழ் அமைப்புக்களுக்கும், தமிழ் போராட்ட ஆர்வலர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!! – அருகன்

vp1228_thumb இலங்கை அரசும், மகிந்த குடும்பத்தினரும் சிங்கள இனவாதிகளும் இணைந்து சர்வதேசத்தின் விழிகளில் “கூளிங்கிளாஸ்” போடப்பார்க்கின்றனர்.

சிறுபான்மை இனத்தின் சிக்கலை ஒரு பொருட்டாக எடுக்காது, உள்ளாட்டுச்சிக்கலை (மகிந்த-சரத்)பிரபல்யப்படுத்தி அதனை அரசியலாகவும், போர்க்குற்ற; திசைதிருப்பல்களும் இடம்பெற்று வருகின்றமை மறைவாகஉள்ளஉண்மைகள்.

தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சிக்கலை விட்டு, தமிழர்களின் அபிவிருத்தி, மீழ்கட்டுமாணம் போன்றவற்றை விடுத்து, சரத்தின் விவகாரத்தை தூக்கிப்பிடித்து ஒரு செய்தியில் பலதடவை சரத்… சரத் என்று முணுமுணுத்து தமிழர்களின் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். இதன்மூலம்மகந்தவையும் அவர் அரசையும்கீழ்ப்படுத்துpன்றோம் என்ற பாணியில் சரததை தமிழர்க் மததியில் உயர்த்திக்கொணடு போகின்றோம்.

இது அரசின், அரசியல் தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எப்போதும் தமிழர்களை ஒன்றிணைய விடாது, தமிழர்கள் சிங்களவர்களை தாங்கியே இருக்க வேண்டும் என்பதனையே கடந்த காலத்தில் கூட்டமைப்பும் உறுதி செய்திருக்கின்றது.

இது தன்னந்தனியாக போராடிய எமது தலைவரின் கொள்கைக்கும் அவருடைய வீரத்திற்கும், இத்தனை வருட தியாக அர்ப்பணிப்பிற்கும் இழிவை ஏற்படுத்துகின்றது.

தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல, தப்பான ஜனநாயகத்திற்கே எதிரானவர். நம்பகத்தனமற்ற பேச்சுக்களையே நிராகரித்து வந்தவர்… நியாயமான உறுதியான தீர்வு கிடைக்கும் பட்ஷத்திலேயே தமது அமைப்பைக் கலைப்பதாக அமைப்பின் ஆரம்பத்தில் எடுத்த வாக்குறுதியென்பதனை மக்களும் அமைப்பாளர்களும் மறந்து விடக்கூடாது.

இன்றைய இலங்கை அரசும் ரசிய் வாதிகளும் மிகத்தந்திரமான முறையில் காய்களை நகர்த்தி, தமிழீழப் போராட்டத்தையே நாடுகடத்திவிட்டார்.

இதனை அறியாத எமது போராட்ட அமைப்பாளர்களின் தொனியும் தப்பினோம் பிழைத்தோம் என்றும், ஏனோதானோ என்றும் வட்டுக்கோட்டை,  நாடுகடந்த போராட்டம் என்றும் புலம்பெயர்ந்த மக்களை வைத்து போர்வை போர்க்கப்பார்க்கின்றனர். அதற்கு தலைவரை காரணம் காட்டுகின்றனர். “போராட்டம் புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக” உண்மைதான்!!! ஆனால் அது எவ்வாறு???

30வருட போராட்டத்தின் வேகத்திலும்பார்க்க தற்போதைய போராட்டத்தில் விவேகமும் காணப்படவேண்டும் என்பதே தலைவரின் உட்கருத்து. தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்பட விடாது, முன்பு போல மற்றைய அமைப்புக்களையும் புறந்தள்ளியே ஒவ்வொரு செயற்பாட்டையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வெற்றிகண்டவர்கள் சிங்கள பேரினவாதிகளே!!! அத்துடன் அடிக்கடி எனது எழுத்துக்களின் உறுதிப்படுத்தும் இன்னொரு விடயம் “தமிழர்களின் போராட்டத்தில் உரிமைகளை முழுமையாகவும், தனிநாட்டையும் பெற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம் மக்களே” இவர்கள் தம்மை போராட்டத்தில் ஈடுபடுத்தாமலும், இழப்புக்களைச் சந்திக்காலலும் தியாகங்களை றே;கொள்ளாமம் தம்மை இலங்கை அரசில் திடப்படுத்துpக்கொண்டனர்.

இலங்கை அரசின் ஆட்சியைத்தீர்மானிப்பது தமிழர்கள் என்ற நிலை போய் முஸ்லீம்மக்கள் போதும் என்ற நிலைமாறிவருகின்றமை தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க பின்டைவென்பதனை அப்போதே தலைவர் திடமாகப்புரிந்தார்.

முஸ்லீம் கட்சி, தலைவரைச் சந்தித்த காலம் போய், தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் கட்சிகளை கெஞ்சி வால்பிடிக்கும் அளவிற்கு நிலை மாறிவிட்டதனை யாரும் மறுக்க முடியாது. இது பிளவினை ஏற்படுத்தவோ அல்லது போராட்டத்தை தூண்டுவிக்கவோ எழுதப்படவில்லை. மாறாக உண்மையின் தரிசனத்தைப் படம்போட்டுக் காட்டமுனைகின்றேன் அவ்வளவுதான்.

தலைவரின் ஒவ்வொரு பின்னடைவிலும் அவர் உறுதியாகச் சொன்ன வார்த்தைகள் தமிழர்களால் மறக்க முடியாதவை. அதாவது, “இவை தற்காலப் பின்னடைவே” எமது தற்போதைய திடமற்ற தலைவர்களை ஒருமுறை காதுகொடுத்துக் கேட்கச்சொல்கின்றேன்… அந்த காதுகளுக்கிடையில் மெல்லிய தலைவரின் திடமான குரல் ஒலிக்கும். அதனை உற்றுக்கேளுங்கள் அதன்பின்னர் தங்கள் அடிகளை எடுத்துவையுங்கள். தங்கள் தடத்தில் தற்போது சிங்களம் குளிர்காய்கின்றது.

“பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகுது” என்றில்லாமல் பூனை எப்படித்தான் விளையாடினாலும், பூனையினைக் களைக்கவைத்து காரியத்தை சாதிக்கும் கணனிகற்ற சுண்டெலியாக நாம் மாறவேண்டாமா???

சிங்களம் தம்முடைய குழப்பத்தில் தமிழர்களின் தடத்தையும், திடத்தையும் சர்வதேசத்தின் மத்தியில் குலைக்கனப்பார்க்கின்றனர். அதே குழப்பத்தைப் பயன்படுத்தி, தக்க விதமாக கையாண்டு அதே அரசியல் சாணக்கியத்தால் நாம் இலங்கை அரசை எமது பக்கம் சாய்த்து, சர்வதேசத்தில் எமது பங்களிப்பைக் காத்துக்கொள்ள ஏன் முன்வரக்கூடாது.

இவ்வாறான சந்தர்ப்பம் தொராது… திடீரென எல்லாம் ஓய்ந்து விடும். எமது தலைவர் எவ்வாறு தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினாரோ அதே வழியைத்தான் மகிந்தவும் செயற்படுத்தி வருகின்றார் என்பதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தலைவரின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் தலைவர் எவ்வாறு அரசிலை நடத்தினாரோ, அதே பாடத்தைக் கற்றுத்தான் மகிந்தவும் தனது காய்களை நகர்த்துகின்றார்.

காலப்போக்கில் எதிர்க்கட்சிகள் என்ற நிலை மாற்றப்பட்டு, ஒரே “வெத்திலை” கூட்டமைப்பின் பாகமே எதிர்க் கட்சியாக வேண்டும் என்ற அற்ப ஆசையிலேயே தனது அனைத்து காய்களையும் நகர்த்துகின்றார். அதன் அடிப்படையிலேயே முதலில், எதிர்க்கட்சியின் பலவருட யானைச்சின்னத்தை பறக்கும் பட்சியாக்கினார். பட்சி பறந்தே போய்விட்டது!

தற்போது மகிந்தவும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து கொள்வார்கள்… அதன்பிறகு அவர்கள் இணைந்து பிரிந்து தமிழர்களைப் பேக்காட்டுவார்கள்… இதில் எமது போராட்டங்களும் தலைவரின் எண்ணங்களும் மண்ணோடு மண்ணாக கரைந்து போய்விடும் என்பதே சிங்கள இனவாதிகளின் எண்ணம்.

தமிழ் அமைப்புக்களும் “வெத்திலை” சின்னத்தில் போட்டியிடுவோர்கள் மட்டும் அமைச்சராகக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். மற்றவர்கள் வெறும் எம்.பி.யாக இருக்க வேண்டியதுதான். காரணம் தற்போதைய அதிபரின் காலம் இன்னும் எட்டு வருடங்கள் நிலைத்திருக்கப் போகின்றது என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் எமது தலைவர் எத்தை முக்கியமானவரோ, அதுபோலவே இலங்கை வரலாற்றில் மகிந்த முக்கியமானவராக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகின்றார்.

என்ன தலைவர் தமிழர்கள் மத்தியில் சர்வசே அதிகாரமற்ற வழியில் மேற்கொண்ட உள் ஊர் விடயங்களை, மகிந்த சட்ட அங்கிகாரப்பதவியுடன் சர்வதேசத்தினையும் இணைத்து செயற்படுகின்றார். காரணம் அவருக்கிருக்கும் முழு சர்வதேச அதிகாரம் கொண்ட ஆட்சி நிலை.

இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கொஞ்ச நாட்களின் பின்னர் சரத்திற்கு கிடைக்கப்போகும் அமைச்சுப்பதவிபற்றியும் இப்போதே இதில் எடுத்துக்காட்டுகின்றேன். அப்போது தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் வாயைப்பிளந்து மகிந்தவைப்பார்ப்பார்கள்.

தற்போதைய அமைச்சர் கருணாவை வைத்து சர்வதேசத்திற்கு புலிகளின் நிலையை எடுத்துக்காட்டிய மிக முக்கிய ஆதாரமாக்கியது போல், சரத்தை வைத்துத்தான் தமிழர்களுக் கெதிராகவும், புலிகளுக் கெதிராகவும் நடாத்திய போரில் ஏற்பட்ட குற்றச் செயல்களை இல்லாதொழிக்கப்போகின்றார் இலங்கை அதிபர்.

சாவதேசம் தலையிடும் என்று தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க, சர்வதேசத்தையே ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றார் மகிந்த. அதாவது, சரத் தேசத்தையே காட்டிக் கொடுக்க முனைந்ததாக மக்களுக்கு விளக்கம் கொடுத்தாலும், நீதிமன்றத்தில் வேறு விதமாகவே காய்கள் நகர்த்தப்படும்.

அதாவது, மகிந்தவின் உத்தரவின் பேரில் போர் நடந்தாலும் அதனை தவறாக கையாண்டு, போர்குற்றங்களை மேற்கொண்டது சரத் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். அதன் அடிப்படையில் போர்க்குற்ற பேச்சுக்கள் சர்வதேசத்தில் இருந்து அழிந்து விடும்.

அதன்பிறகு தமிழர்கள் எத்தனை குத்தாட்டம் போட்டாலும், எத்தனை ஆதாரத்தை கொணர்ந்தாலும்… ஏன் தலைவரே நேரில்வந்து சொன்னாலும் எடுபடாது. காரணம், அதற்கான தண்டனையினை சரத் ஏற்றுக் கொண்டுவிட்டார். குற்றத்திற்கான தண்டனை முடிந்ததும் அல்லது குறைக்கப்பட்ட காலத்தில் அதாவர், தேசத்தை காப்பதற்கான பெரும் பணியில் ஈடுபட்டதற்காக காலகன்குறைப்பு என்ற அடிப்படையில் வெளிவந்த பின்னர் சரத் விரும்பிய எம்.பி. பதவியல்ல மினிஸ்டர் பதவியே கிடைக்கும்!!! ஏன் பிரதம மநற்திரி பதவிகிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவையெல்லாவற்றையும் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் தமது காய்களை தாமே பெருமைப்படுத்திக் கொண்டு நகர்த்திவருகின்றனர். தலைவர் அந்த காலத்தில் பகலில் நடமாடுவதிலும் பார்க்க இரவிலே அதிகம் நடமாடியதற்குக் காரணம், மற்றவரின் தூக்கத்திலேயே எமது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக.

எமது தூக்கத்தில் சிங்களம் விழிதர்துக்கொள்கின்றது. ஆங்காங்கே நிகழ்வுகளை நடாத்திவிட்டு நாம் இன்னும் செயற்படுகின்றோம் என்று மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் படம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். சிங்களம் விழித்துக்கொண்டிருந்தாலும் அது இப்போது அன்ன நடைதான் போடுகின்றது… அது வேக நடைக்கு வரும்போது புலத்தின் போராட்டம் முடிவுக்குகொண்டுவா முயற்சியை ஓங்கி அழுத்தும். அப்போது எமது தலைமையை நம்பிய மக்கள் கைவிடப்பட்டுவிடுவார்கள்.

இப்போது நிம்மதியாக சிங்களம் அரசை நடத்திக்கொண்டிருக்கின்றது. காரணம் தமிழர்களின் போராட்டத்தையே நாடுகடத்திவிட்டதால், அதற்கு ஆதாரமே நாடுகடந்த தமிழீழ அரசு. ஏற்கனவே என்னால் குறிப்பிட்ட விடயம் நாடுகடந்த அரசை அமைப்பதற்கு முன்னர், தேர்தலை நடாத்துவதற்கு முன்னர், புலத்தில் இருக்கும் அணைத்து தமிழ், முஸ்லீம், மற்றும் புலம்வெயர் தேசத்தில் பிரஜையாகியுள்ள தமிழர்களின் வாரிசுகள் அனைவருக்கும் ஒரு தேசிய அடையாளம் இருக்க வேண்டும்.

அதனை எவ்வாறு அமைப்ப வேண்டும் என்று மாதிரியைக்கூட வெளியிட்டேன் அதன்பிறகே தேர்தல், அரசு என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய அமைச்சர்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ்… போன்றோர் கூட தமிழீழத்திற்கு எதிராக வாக்குப்போடமாட்டார்கள். அனால் அது கிடைக்கும் பட்சத்தில். அனால் இவர்களைபற்றி பேச்சை எடுத்தாலே எமது தலைமை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்ற ஐயப்பாடும் இல்லாமலில்லை!!!

இது இப்படி இருக்க தமிழர்களிடம் தமிழீழத்திற்காக வாக்குக்கேட்பது முறையாகத் தெரியவில்லை. எமக்கு எமத்மை நாமே ஆண்டு கொள்ள ஒரு தேசம் வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை அதனை எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்தான் சிக்கலிருக்கின்றது.

எனவேதான் முதலில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தமிழீழ தேசிய அடையாள சான்றிதழ் தேவைப்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

TamilEela Cardநாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று (http://govtamileelam.org/gov/) இணையத்தின் மூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக

Tamil_Eela_Card

அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam –  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

மாதிரி அடையாளச் சான்றிதழ்

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???-   )

2009- 5ம் மாதத்தில் இருந்து மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கை இன்னமும் முற்றுப் பெறவில்லை என்பதிலிருந்தே இதன் பின்னடைவுகள் தெரிகின்றது.

எமது தலைவர் தன் தலைமையி; இதனை மேற்கொள்ள எத்தணித்தால், இதில் அத்தனை திடமும், வைராக்கியமும், வேகமும், அதற்கான முடிவும் தெளிவாகத்தெரிந்திருக்கும்.

மீண்டும் ஒன்றை தெளிவாகப் புரியவேண்டும். தமிழர்களின் அயர்வில் சிங்களம் தனது காய்களை சர்வதேசம் நோக்கி பலமாகப்பதித்து வருகின்றது. –தொடரும்.

Lascia un commento