Galleria

இத்தாலியில் புதிய அரசியல்கட்சி

இதில் கூட எம்வர்களை அதிகமாக உள்வாங்கி புலத்தில் வாழும் எமது புதிய தலைமுறையின் எதிர்காலத்தையும், …

அருகன் Maximin Francis

வணக்கம் இத்தாலி வாழ் தமிழர்களே!!!

“புதிய அரசியல் கட்சி” பதிவு தொடர்பான முக்கிய அறிவித்தல்.

இத்தாலியில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான இத்தாலி தேசியத்தை உடைய 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எமது அலுவலகத்தில் தங்கள் ஆதரவை வழங்க வேண்டப்படுகின்றீர்கள்

கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக எனது கடமைகளையும் சேவைகளையும் செவ்வனே செய்து வருவதற்கு இப்போதும் எனது அலுவலகம் மக்களால் நிறைந்திருப்பதே சான்றாக இருக்கிறது.

இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது இன்றுள்ள நிலைக்கு வருவதற்கு இன்றுவரை புலத்தில் எத்தகைய சிக்கல்களை அனுபவித்திருப்பேன், எத்தனை இடையூறுகளை தாண்டி வந்திருப்பேன் என்பதனை என்னை விரும்புபவர்களாலும் சரி என்மீது விசமம் கொண்டு வாழ்பவர்களாலும் சரி உணரமுடியும் என்பதில் சந்தேகமில்லை!

புலத்தில் செயற்பட்டாலுங்கூட எப்போதுமே தமிழ் மக்களின் நன்மை கருதியே சிந்திப்பதும் செயற்படுவதும் எனது ஆழ்மனச் செயற்பாடுகள்.

அந்தவகையில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான இத்தாலி அரசியல் கட்சியின் புதிய பிறப்பு தமிழர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கட்டியெழுப்பும் என்பதில் சந்தேகமில்லை

நல்ல அனுபவமும் ஆழுமையும் கொண்ட தலைமையை கொண்டே இந்தக்கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதில் கூட எம்வர்களை அதிகமாக உள்வாங்கி புலத்தில் வாழும் எமது புதிய தலைமுறையின் எதிர்காலத்தையும், இன்றைய எமது உரிமைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றையும் சரியான முறையில் பெற்றுக் கொள்ளவும் நாளைய வரலாற்றில் கொண்டு செல்லக்கூடிய மாபெரும் சந்தர்ப்பங் கிடைத்துள்ளதை பல தமிழ்த்தலைமைகளுடன் எடுத்துரைத்துள்ளேன். ஆனால் எவ்வளவு தூரம் அவர்கள் மக்கள் பக்கம் சிந்திக்கின்றார்கள் என்பது எனக்குக் கேள்விக்குறியாகவே உள்ளது.

எனினும் எமது பிரதேசத்தில் EMILIA ROMAGNA) அதிலும் குறிப்பாக “Reggio Emilia e provincia, Parma e provincia, Piacenza e provincia” வாழும் தமிழர்களிடம் நான் கேட்டுக்கொள்ளும் விடயம் ஒன்று உள… தற்போது நாம் ஆரம்பித்துள்ள எமது செயற்பாட்டிற்குத் தங்கள் ஆதரவை காட்டும் வகையில் தங்களது ஒப்பத்தை எமது அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட்ட நபர்கள் ஊடக தெரிவிக்கும் படி வேண்டப்படுகின்றீர்கள்.

மிகக்குறைவான நேரங்களையே இத்தாலி அரசு வழங்கியுள்ளது, காரணம் புதிய கட்சிகளை கட்டுப்படுத்தும் வகையில் போலும் … எனவே தங்களுடைய நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளை உணர்ந்து தாங்களாகவே இதில் முன்வந்து தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டுகின்றேன்.

இன்னுமொரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன் கட்சியின் பெயருக்காக தங்கள் ஆதரவை வழங்காது திறமையும் அனுபவமும் முயற்சியும் உள்ள நபர்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் எதிர்கால ஆதரவை வழங்கும்படியும் வேண்டுகிறேன்.

மற்றைய பிரதேசங்களில் இருப்பவர்கள் தங்கள் ஆதரவை வழங்க அல்லது கட்சியுடன் இணைந்து செயற்பட எம்முடன் தொடர்பு கொள்ளவும்

Mr. Francis Maximin JP (LKA)

(அகில இலங்கை சமாதான நீதவான் JP)

Direttore Provinciale

Patronato INAPI sede Provinciale

Fenapi Group of Reggio Emilia

Via L. Sani, 13/M

42121 Reggio Emilia (RE) – Italy

m.francis@inapi.it (Ufficio) maximin.francis@spidmail.it (PEC)

arugan@hotmail.com , arugan@hotmail.it (Personale)

0522 405532 / 3204031624 (WhatsApp)

Lascia un commento